பிக் பாஸ் 7 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்..அதிகம் யாருக்கு தெரியுமா? ஆனால் இவருக்குத்தான் குறைவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று 97வது நாளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் யாருக்கு அதிகம் சம்பளம், யாருக்கு குறைவு என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்த நிலையில் அதற்குப் பிறகு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆகவும் உள்ளே வந்திருந்தனர். இந்த நிலையில் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியானதும் ரசிகர்கள் ஒரு நாளைக்கு இவர்களுக்கு இருக்க இடமும், உண்ண உணவும் கொடுத்து இவ்வளவு சம்பளமும் கொடுக்கிறார்களா? என்று ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த வகையில் இறுதி கட்டத்தில் வந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வின்னராக போகிறார்? யார் ரன்னராக போகிறார் என்று இப்ப வரைக்கும் ரசிகர்களால் உறுதியாக யூகிக்க முடியாத வகையில் தான் விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.
அதிலும் எப்படியும் இந்த சீசனில் டைட்டில் வின்னரில் ஒருவராக விசித்திரா இருப்பார் என்று ரசிகர்கள் நம்பி கொண்டு இருந்த நிலையில் அந்த நம்பிக்கையில் பல லாரி மண்ணைக் கொட்டியது போன்று இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது விசித்திராத்தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பற்றி விரிவாக்க பார்க்கலாம். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிக சம்பளம் வாங்கும் ஒரே போட்டியாளர் விசித்திரா தான் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஒரு நாளைக்கு 30,000 சம்பளம் பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவர் சீனியர் நடிகை என்பதாலும் ஏற்கனவே அவர் குக் வித் கோமாளி முதலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பதாலும் அவருக்கு சேனல் தரப்பில் இருந்து இவ்வளவு சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்த விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், கானா பாலா மற்றும் ரவீனா ஆகியோருக்கு ஏற்கனவே ஓரளவு வெளியே பிரபலம் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவருக்குமே 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது.
இதில் யுகேந்திரன் ஒரு சில வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். விஷ்ணு இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே விளையாடி இப்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல கானா பாலா ரவீனா போன்றோரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கின்றனர்.

ஆனால் கானா பாலா ஒரு சில வாரங்களில் வெளியே போயிருந்தாலும் ரவீனா 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். அதைத் தொடர்ந்து மாயா, பிரதீப், மற்றும் தினேஷ் போன்றோருக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பிரதீப் சீக்கிரமாக வெளியேறி இருந்தாலும் மாயா மற்றும் தினேஷ் இருவரும் இப்ப வரைக்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து கூல் சுரேஷ், அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, பூர்ணிமா, ஐசு, மணி, சரவண விக்ரம், அக்ஷயா, விஜய் வர்மா, வினுஷா தேவி போன்றோருக்கு 15,000 சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் அவர்களை தொடர்ந்து ஜோவிகா, நிக்சன், அனன்யா போன்றோருக்கு தான் இந்த சீசனில் எல்லோரை விடவும் குறைவான சம்பளமான பத்தாயிரம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இப்போது உள்ள நிலவரப்படி அர்ச்சனா, மாயா, தினேஷ், மணி, விஜய் வர்மா, விஷ்ணு போன்ற ஏழு பேரும் நிகழ்ச்சியில் தொடர்கின்றனர். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்? அதோடு கிடைக்கும் ஐம்பது லட்சத்தையும், இவர்களுடைய சம்பளத்தோடு சேர்த்து அள்ளி கொண்டு போகப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications