பிக் பாஸ் மணியின் வாழ்க்கையில் இத்தனை கஷ்டமா? உயிர் நண்பர்களால் ஏமாற்றம்.. அதுவும் இப்படியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இறுதி கட்டத்தில் ஒரு போட்டியாளராக இருக்கும் மணிச்சந்திராவின் வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகள் குறித்து பிரபலம் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் சிரித்துக் கொண்டிருக்கும் மணியின் வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்களா? என்று தான் நினைக்க தோன்றியிருக்கிறது.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மணி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல இடங்களில் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாராம். அந்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதிலும் இப்போது டான்ஸ் மாஸ்டராக மாறி இருக்கும் மணி ஆரம்ப காலகட்டத்தில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதல் ஆளாக எலிமினேஷன் ஆகி இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு டான்ஸ் மாஸ்டர் அமீர் தான் ஆதரவாக இருந்திருக்கிறார்.. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மணி டான்ஸ் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அதுவும் அவார்டு ஃபங்ஷனில் இவர் அங்கு கலந்து கொள்ளும் பிரபலங்களை கலாய்த்து டான்ஸ் ஆடுவது அதிகமாக லைக்குகளை இருக்கும். அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி விழாவின்போது ஒவ்வொரு சீசனிலும் மணி டான்ஸ் தவறாமல் இடம்பிடித்துக் கொண்டிருக்கும் அதுபோல ஆரம்ப காலகட்டத்தில் மணியின் அப்பா மெக்கானிக் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார்.
இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவாராம். தன்னுடைய 3 மகன்களையும் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளையும் கூப்பிட்டு வைத்து அந்த குழந்தைகளுடன் விளையாடுவதையே தன்னுடைய முக்கியமான வேலையாக மணியின் அப்பா வைத்திருக்கிறார். அப்போது மணிக்கு டான்ஸ் திறமை இருப்பதை கண்டுபிடித்து அவருடைய அப்பா அவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்து இருக்கிறார்.
சின்ன வயதில் அடிக்கடி பல மேடை நிகழ்ச்சிகளில் இவருடைய டான்ஸ்க்கு அதிகமான கைத்தட்டல்களும் பணமும் கிடைத்திருக்கிறது. அதனாலயே மணிக்கு தொடர்ந்து டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசை வந்ததாம். அப்போது 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது தான் அவருக்கு கூட படித்த பசங்களால பல தொந்தரவு வந்திருக்கிறது.
அதுவரைக்கும் நெருங்கிய நண்பர்கள் என்று நினைத்திருந்த மணிக்கு சில நண்பர்கள் செய்த துரோகம் மற்றும் மற்றும் தவறாக நடந்து கொண்டது பெரிய அளவில் சங்கடத்தை கொடுத்து இருக்கிறது. அதோ நேரத்தில் அவருடைய அம்மாவோடு பழகியவர்களும் பணத்தை ஏமாற்றி இருக்கிறார்கள். இதனால் அந்த நேரத்தில் மணி ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.
பிறகு கல்லூரியில் சேர்ந்து அங்கு நண்பர்களின் தொல்லை இல்லாமல் இருந்த நிலையில் அங்கிருந்த சில நண்பர்களின் ஆதரவு காரணமாக மானாட மயிலாட நிகழ்ச்சியில் மணிக்கு டான்ஸ் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நேரத்தில் தான் டான்ஸ் மாஸ்டர் அமீரோடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் முதலில் அமீர் மற்றும் இரண்டாவது எலிமினேஷனில் மணியும் வெளியே வந்திருக்கின்றனர். அப்போது மணி வாழ்க்கையில் ரொம்பவே உடைந்து போய்விட்டாராம். தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து எனக்கு டான்ஸ் செட் ஆகாது போல என்று அழுது இருக்கிறார்.
அந்த நேரத்தில் கூடவே இருந்து டான்ஸ் மாஸ்டர் அமீர்தான் அந்த கஷ்டத்தில் இருந்து மணி வெளியே வருவதற்கு உதவி செய்திருக்கிறார்.
அதோடு விஜய் டிவியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அமீர் அழைத்து சென்று இருக்கிறார். அப்படித்தான் ஜோடி சீசன் 1 நிகழ்ச்சியில் ஃபெனிலியாவோடு மணிக்கு டான்ஸ் ஆட தொடங்கி இருக்கிறார்.
ஆனால் பெங்களூரில் இருந்த மணி சென்னையில் தங்கி இருக்க போதிய வருமானம் இல்லாமல் இருந்திருக்கிறது. அதனால் தன்னுடைய நண்பர்களோடு காலையில் அன்றிசர்வ் ரயிலில் வந்து இறங்கி ஸ்டேஷனில் குளித்துவிட்டு செட்டுக்கு போவாராம். பிறகு அங்கு கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு மீண்டும் ட்ரைனில் சென்னை பெங்களூருக்கு கிளம்பி விடுவாராம்.
இப்படி ஆறு மாசமாக கஷ்டப்பட்டு தான் அந்த சீசனில் டைட்டில் வின்னராக மாறி இருக்கிறார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் மணி ஆரம்பத்தில் இருந்து அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகளையும் பெற்று வருகிறார். அதிலும் இவர் யாரையும் ஏமாற்றவில்லை எந்த இடத்திலும் நடிக்கவில்லை என்று இப்போது அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மணிக்கு இந்த சீசனில் டைட்டில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications