பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அடுத்த போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று இரவு மிட் நைட் எவிட்சனில் விஜய் வர்மா வெளியிடப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து இன்று இரவு முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை இருக்கின்றனர்.
அதில் ஒரு போட்டியாளர் இன்று வெளியேற இருக்கும் நிலையில் மீதமுள்ள நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு போவார்கள் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் வாக்கு செலுத்திய அடிப்படையில் நேற்று போட்டியாளர்கள் சேவ் செய்யப்படவில்லை என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. அதேபோல தான் இன்று மக்கள் வாக்குகளின் அடிப்படையில் இல்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முக்கிய போட்டியாளர்களை தூக்கி இருக்கின்றனர்.
அது வேறு யாரும் இல்லை விஷ்ணு தான் என்று கூறப்படுகிறது. விஷ்ணு ஏற்கனவே நேரடியாக இறுதி கட்டத்திற்கு போகும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை வெற்றி பெற்று அந்த டிக்கெட்டை வைத்திருந்த பிறகும் இன்று அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 14ஆம் தேதி மாலை கிராண்ட் பினாலே நடைபெற இருக்கிறது. அதில் இப்போது வரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு மிட்நைட் எவிக்ஷனில் விஜய் வர்மாவை தூக்கியது போல இன்று இரவு மிட் நைட் எவிக்ஷனில் விஷ்ணுவை பிக் பாஸ் அணியினர் தூக்கி விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஏற்கனவே நேற்று அதுவரைக்கும் ஜாலியாக சண்டை போட்டுக்கொண்டு பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிக் பாஸ் மிட்நைட் எவிக்ஷனை அறிவித்தது. அறிவித்த மறுகணமே விஷ்ணுவின் முகம் வாடிப்போய் இருந்தது. பயத்தில் இருண்டு போய் இருந்த விஷ்ணு பிக் பாஸ் சொன்னபடியே ஒரு கதவுக்கு பின்னாடி நின்று கொண்டிருந்தார்.
அந்த நிலையில் முதல் ஆளாக பிக் பாஸ் தினேஷ் சேவ் என்று சொன்னபோது எல்லோரும் சந்தோஷப்பட்டு இருந்தனர். அதைத் தொடர்ந்து மணியை சேவ் என்று சொல்லப்பட்டது, அடுத்ததாக மாயா சேவ் என்று சொன்னார்கள். அதைத்தொடர்ந்து கடைசி இடத்தில் விஷ்ணு சேவ் என்று சொல்லப்பட்டது. ஆனால் விஷ்ணு மற்றும் விஜய் வர்மா இருவரும் இருக்கும்போது பிக் பாஸ் நீங்கள் கதவை திறந்து பார்க்கலாம் என்று சொன்னபோது விஷ்ணு கதவை உடைத்து கூட வெளியே வந்து விடலாமோ என்கிற வேகத்தில் கதவை இழுத்துக் கொண்டு இருந்தார்.
பிறகு பிக் பாஸ் நீங்கள் சேவ் என்று சொன்ன பிறகுதான் அவர் முகத்தில் ஒரு அமைதியை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அடுத்த ஒரு எவிக்ஷனை அறிவித்திருக்கிறார்கள். பொதுவாக விஷ்ணுவிற்கு இந்த சீசனில் பெரிய அளவில் நெகட்டிவ் இல்லை. அவர் என்ன செய்தாலும் அது காமெடியாகத்தான் இருக்கிறது என்று தான் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால் விஷ்ணுவிற்கு தான் செய்வது தவறாகப் போய்விடுமோ? மக்கள் தன்னை தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற பயத்தில் தான் இருந்து வருகிறார். விஷ்ணுவிடம் இருந்த பணத்தை வைத்து பிக் பாஸ் அவருக்கு வீடியோ கால் பேசலாம் என்ற சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டிருந்த போது கூட தன்னுடைய தோழிகளிடம் இதைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டிருந்தார்.
அதுபோல நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்த கூல் சுரேஷ் இடமும் வெளியே எதுவும் தப்பா போகலையே? நல்லா தானே போயிட்டு இருக்கிறது என்றுதான் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். எப்படியோ இன்று வெளியே சென்று தன்னுடைய நிலைமையை பற்றி அவர் தெரிந்து கொள்ளப் போகிறார். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications