பிக் பாஸ் 7: பூர்ணிமா பேசிய வார்த்தை.. கடுப்பாகி உண்மைகளை கொட்டிய மாயா.. எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 14ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் டான்ஸ் மாரத்தான் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு இடையே பூர்ணிமா டான்ஸ்க்கு கமெண்ட் கொடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இதுவரைக்கும் ஒரே அணியாக இருந்த பூர்ணிமா மற்றும் மாயாவிற்கும் இடையே சண்டை வந்திருக்கும் நிலையில் நிகழ்ச்சி இனி எப்படி போகப்போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரே அணியாக மாயா மற்றும் பூர்ணிமா இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு கேங் ஆக அடுத்த போட்டியாளர்களை புல்லி பண்ணி வருகிறார்கள் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
இதை ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பல போட்டியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதனாலையே மாயா மற்றும் பூர்ணிமா மீது அளவுக்கு அதிகமாக ரசிகர்களின் மத்தியில் கோபம் ஏற்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் கமல்ஹாசன் பலமுறை பூர்ணிமாவை திட்டி அறிவுரை கொடுத்து இருந்தாலும் மாயாவிற்கு பெரிய அளவில் அட்வைஸ் செய்தது கிடையாது.

ஆனால் மாயா பேச்சைக் கேட்டு தான் பூர்ணிமா பல இடங்களில் நடந்து கொள்கிறார். அதோடு சமீபத்தில் பூர்ணிமா விஷ்ணுவுடன் பேசுவது மாயாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் பிரிந்தால் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர்.
இப்படியான நிலையில் இன்றைய எபிசோடு முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாயா மற்றும் ரவீனா இருவரும் பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வந்தேன் வந்தேன் மீண்டும் நான் வந்தேன்' என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி கொண்டிருக்கின்றனர். அப்போது அதற்கு கருத்து தெரிவித்த பூர்ணிமா ரவீனா மாயாவிற்கு சரியான ஸ்பேஸ் கொடுத்து டான்ஸ் ஆடினார். அதனால் நான் ரவீனாவை பாராட்டுகிறேன் என்று கூறியிருந்தார்.
இதனால் கோபமான மாயா பூர்ணிமாவிடம் நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம் என்று கேட்க, அதற்கு பூர்ணிமா அப்போ நான் என்ன பாயிண்ட்டை தான் சொல்றது என்று கேள்வி கேட்கிறார். அதற்கு மாயா என்ன புரிஞ்சிக்காம நீங்க எப்பவுமே இப்படித்தான் பண்றீங்க, அங்க நான் வந்து ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்.

ஆனால் நீங்க என்னை மாட்டி விடுறீங்க என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா நீங்க இப்போ இப்படி சொன்னதுக்கு அப்புறமா இதை பத்தி நான் பேசுறதே வேஸ்ட் என்று கோபமாக அங்கிருந்து கிளம்பி போகிறார். இந்த ப்ரோமோ வெளியானதும் ரசிகர்கள் இவர்கள் பிரிந்தது நிரந்தரமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். அதோடு உண்மையில் நேற்றைய 24 மணி நேர எபிசோட்டில் அர்ச்சனா, மாயா, தினேஷுடைய டான்ஸ் அருமையாக இருந்தது.
ஆனால் அதை ஒரு மணி நேரம் எபிசோடில் காட்டப்படவில்லை என்று பலர் பீல் பண்ணி வருகிறார்கள். அதுபோல நேற்று பிக் பாஸ் கோபப்பட்டு எல்லா போட்டியாளர்களையும் திட்டியிருந்தார். அதற்கு முக்கிய காரணமே ரவீனா தான். ரவீனா மொத்த பணத்தையும் மணியிடம் கொடுத்தது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும் தனக்கு மொத்த பணத்தை தந்திருந்தாலும் மற்றவர்களின் பெர்பார்மன்ஸ் சூப்பராக இருக்கும் போது அவர்களுக்கு பணத்தை கொடு என்று மணி கூறி இருந்ததால் அதற்கு பல ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications