பிக் பாஸ் 7: நிக்சனை கதறவிட்ட அவருடைய அப்பா.. அடப்பாவி வீட்டிலும் இப்படி தானா? நெகிழ வைத்த வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் இன்று இரண்டாவது நாளாக ஃப்ரீஸட் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் நிக்சன் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றார்.
அவர் நிக்சனை பற்றி பல ரகசியங்களை உடைக்க, அதை பார்த்து போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நேற்றைய தினத்திலிருந்து ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் நேற்று சில போட்டியாளர்களின் பெற்றோர் வந்திருந்தனர். அதை தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நிக்சனின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவர் நிக்சனிடம் நீ இப்போ டைம்க்கு எந்திரிக்கியா என்று கேட்க, அதற்கு நிக்சன் ஆமாம் என தலையை ஆட்டிக் கொண்டு இருக்க வீட்ல எல்லாம் ஏழு மணிக்கு ஸ்ட்ரைட்டா எந்திரிப்பாரு, ஈவினிங்ல்ல... இங்க நாய் குறைக்கிறதில்லா ஆனா அங்க நாய் மாதிரி பேசினா கூட எந்திரிக்கிறது கிடையாது.
இவ்வளவு நாளா நான் போராடினேன் இவன் மாறமாட்டானு... ஆனா நீங்க இவனை வச்சு செஞ்சீங்க, உங்கள எல்லாம் பார்த்து நான் கத்துக்கிட்டேன் அடிச்சு திருந்தாத பிள்ளையே ஆப்பு வச்சு திருத்தலாம்னு.. அதுபோல பிக் பாஸ் இவனுக்கு ஒரு கேப்டன்சியும் கொடுத்து ஒரு பெல்லையும் மாட்டி விட்டார் பாருங்க சூப்பர். அதுபோல நீ திருந்திட்டன்னு சொன்னா பாத்தியா பிளாக்ல இருந்து உன் நம்பரை எடுத்தாலும் பத்தாது என்று கலகலப்பாக பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் நிக்சனின் அப்பா இவ்வளவு நேர்மையாக பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நிக்சன் அப்பாவின் பேச்சு பலரையும் கவர்ந்திருக்கிறது. ஒரு தந்தை தன்னுடைய மகன் சரியாக வளர வேண்டும் என்பதற்காக பொறுப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு முரட்டுத்தனமாக கோபத்தை காட்டிக் கொண்டு பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் புத்தியை நிக்சன் வைத்திருந்தாலும், அதற்கு நிக்சன் தந்தை தன்னுடைய இயலாமை மற்றும் வருத்தத்தை தெரிவித்திருக்கும் விதம் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்த அர்ச்சனாவின் அப்பா நிக்சனிடம் நேரடியாகவே நீ எங்க பொண்ணை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்க வேண்டும் என்று சொன்னது தப்பு. அதை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா என்று கேட்டிருந்த விதம் ஒரு தந்தையின் வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தது. ஆனால் வழக்கம் போல நிக்சன் நானா அப்படி பேசினேன். எனக்கு எப்போதுனு தெரியலையே என்று சமாளித்து இருந்தார்.
ஆனால அதற்கும் அர்ச்சனாவின் அப்பா நிக்சன் இடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஏற்கனவே வினுஷா பிரச்சனை பெரிய அளவில் பிக் பாஸ் வீட்டிற்குள் பூகம்பமாக வெடித்திருந்த நிலையில் இதுவரைக்கும் அர்ச்சனாவை பற்றி நிக்சன் பேசியது வெளியே தெரியாமல் இருந்த நிலையில் நேற்று அர்ச்சனாவின் அப்பா அதை போட்டு உடைத்து இருந்த நிலையில் இனி இதை வைத்து அர்ச்சனா பிரச்சனை பண்ண போகிறாரா? அல்லது வேறு யாரும் நிக்சனை கிழித்தெடுக்க போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications