பட்டும் திருந்தாத ரவீனா.. மணி சொன்ன வார்த்தை! இது எங்க போய் முடிய போகுதோ? இதெல்லாம் ரொம்ப தப்புமா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 22ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் நேற்று ரவீனாவின் உறவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசியதை பற்றி மணி மற்றும் ரவீனா பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது தன் மீது பல பழிகளை சுமத்திய ரவீனாவின் உறவினர் குறித்து மணி எதிர்பாராத வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீ டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். அதில் சிலர் யாரும் எதிர்பார்க்காத சில செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் ஒரு சில போட்டியாளர்கள் வெளியே நடக்கும் விஷயங்களை பிக் பாஸ் வீட்டிற்குள் பகிர்ந்து இருந்தனர்.
அதிலும் அர்ச்சனாவின் அப்பா கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று விக்ரமுக்கு அறிவுரை கூறியிருந்தார்.. அதுபோல நிக்சனிடம் தனது மகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்று விட வேண்டும் என்று கூறியது குறித்தும் மனம் நொந்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று விஷ்ணு, நிக்சன், மணி குடும்பத்தினர் உள்ளே சென்றிருந்தனர். அதில் விஷ்ணுவின் அக்கா விஷ்ணுவிடம் எல்லாரிடமும் சமமாக இரு, யாரிடமும் யார் பக்கமும் அதிகமாக போக வேண்டாம்.
மாயா பூர்ணிமா இருவருக்கும் இடையில் நீ போகாமல் இருப்பது நல்லது என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். அதுபோல நிக்சன் தந்தை உள்ளே சென்று நிக்சனை வைத்து செஞ்சிருந்தார். ஆனால் மற்ற போட்டியாளர்களிடம் படு ஜாலியாக பேசிய மகிழ்ந்திருந்தார். அதுபோல மணி அம்மா ரவீணாவிடம் பேசியது, அவரது பிறந்த தேதியை கேட்டு இருந்தது போன்றவும் பலரையும் வியக்க வைத்திருந்தது.
அதோடு மணிக்கும் உனக்கும் 10 வயசு வித்தியாசம் என்று போட்டுக் கொடுத்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்த நிலையில் ரவீனாவின் சித்தி பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று சென்றிருந்த நிலையில் ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து பேசுறதுக்கா ஷோக்கு வந்து இருந்தீங்க. இன்னொரு தடவை என் பொண்ண தனியாக கூப்பிட்டு வைத்து பேசாத என்று மணியை கடுமையாக எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ரவீனாவின் சித்தி பேசியதை வைத்து மணி காண்டாக பேசியிருக்கிறார். அதில் நான் போனதும் அவங்க ரெண்டு பேரும் என்ன அசிங்கப்படுத்திட்டாங்க. அம்மா வந்து இருந்தா இப்படி சொல்லி இருப்பாங்களான்னு தெரியலையே என்று மணி ரவீனாவிடம் புலம்ப அதற்கு ரவீனா இன்னும் அதிகமா பேசி இருப்பாங்க என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து ரவீனாவை கடுப்பேத்தும் விதமாக மணி நேத்து ஏதோ உனக்கு நான் வேறு பெயர் வச்சிருக்கேன் அது தப்புன்னு சொன்னாங்களே அது என்னவா இருக்கும் என்று கேட்டு, பிறகு அவரே நான் குண்டு பையா என்று உன்னை கூப்பிடுவதா என்று கேட்டு குண்டு பையா... குண்டு பையா என்று ரவீனாவை மீண்டும் கலாய்க்க, அதற்கு ரவீனா அவங்களை நல்லா தான் கடுப்பேத்துறீங்க என்று சொல்லகிறார்.
அதற்கு மணி அவங்க பேசும்போது எனக்கு அதிர்ச்சியா இருந்து என்னடா இதெல்லாம் சொல்லிட்டு இருக்காங்களேன்னு எனக்கு தோணிச்சி. அங்கு உட்காரவே எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு என்று புலம்பி கொண்டிருக்கிறார். ஏற்கனவே நேற்று ரவீனாவின் குடும்பத்தினர் இதுவரைக்கும் ரவீனா மீது தப்பில்லை எல்லா தப்பும் மணி மீதுதான் இருக்கிறது என்று சொல்லும் விதமாக குற்றம் சாட்டியிருந்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரவி மற்றும் மணி இருவரும் நடந்து கொள்ளும் விதம் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கலாய்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாக இருக்கின்றனர். எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று பலரும் திட்டி கொண்டு இருந்தாலும் இருவரையும் திட்டுவதை விட்டுவிட்டு ரவீனா மீது தப்பில்லை அவர் ஒரு குழந்தை என்பது போல நேற்று ரவீனாவின் குடும்பத்தினர் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் ரவீனா கூட இன்றும் மணி பேசுவதை பார்க்கும் போது என்னதான் பட்டாலும் இந்த மணி திருந்த மாட்டார் போல என்று தான் நொந்து கொள்ள தோன்றுகிறது. அதுபோல மணி மற்றும் ரவீனா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே வந்து பழகவில்லை, ஏற்கனவே இவர்கள் இருவரும் வெளியவே நண்பர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இவர்களுடைய குடும்பத்தினருக்கு அது தவறாக தெரியவில்லையா? இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து இவ்வளவு பொங்குகிறார்களே இதெல்லாம் நிஜத்தில் நடப்பதா? இல்லை கண்டன்டு டிராமாவா? என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது என்றும் பலர் கமெண்ட்களில் பத்த வைக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications