பிக் பாஸ் 7 லைவ்: பூர்ணிமாவின் அம்மா செய்த அதிரடி.. நெகிழ வைத்த அந்த சம்பவம்.. மாயாவிடம் கேட்ட வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் பூர்ணிமாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
முதல் குடும்பமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பூர்ணிமாவின் பெற்றோர் மாயா மற்றும் சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதே நேரத்தில் தன்னுடைய அம்மா நடவடிக்கையை பார்த்து பூர்ணிமா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் குடும்பமாக பூர்ணிமாவின் குடும்பத்தினர் வருகை தந்திருக்கின்றனர். பூர்ணிமாவின் அம்மா மற்றும் அப்பாவின் வருகையை முதல் ப்ரோமோவில் பார்த்திருப்பீர்கள்.
ஏற்கனவே பிக் பாஸபாஸ் இன்று காலையில் இருந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடக்க போகிறது என்பதே உளறி வைத்து விட்டார். அதனால் போட்டியாளர்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தினரை வரவேற்பதற்காக அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பூர்ணிமாவின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வர பூர்ணிமா ஓடி சென்று அங்கு இருக்கும் சோபாவின் அடியில் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு பூர்ணிமாவின் அம்மா கண்டுபிடித்து கண் கலங்கி அழுகிறார். எல்லோரும் அம்மாவை பார்த்ததும் பூர்ணிமா தான் அழுவார் என்று நினைத்திருந்த நிலையில் அதற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பூர்ணிமா சிரித்துக் கொண்டிருக்க அவருடைய அம்மா மட்டும் அழுது கொண்டிருக்கிறார். பிறகு ரசிகர்கள் நினைத்தது போலவே பூர்ணிமாவின் அம்மாவை பூர்ணிமாவிடம் என்னை பார்த்தால் நீதான் அழுவா என்று நினைத்தேன்.
ஆனால் நீ இப்படி மாறிட்டேன்னு நினைக்கல என்று சொல்கிறார். பிறகு அங்கிருந்து அனைவரிடமும் பூர்ணிமா அம்மா சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது விசித்திராவிடம் பூர்ணிமாவின் அம்மா மன்னிப்பு கேட்டிருந்தார். அதை பார்த்து பூர்ணிமா அதிர்ச்சியாகி இருந்தார். கூடவே தன்னுடைய மகளுடைய விளையாட்டு மாயாவால் ஸ்பாயில் ஆகிறது என்பது தெரிந்தும் மாயவிடமும் பூர்ணிமாவின் அம்மா சகஜமாக பேசி பழகி இருந்தார்.

முதலில் தயக்கம் காட்டிய மாயா பிறகு அவர்களோடு ஜாலியாக பேசி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் பூர்ணிமாவின் அம்மா அர்ச்சனாவிடமும் மன்னிப்பு கேட்டு என்னுடைய மகள் சின்ன சின்ன தப்பு செய்திருக்கிறார். ஆனால் அவளுக்கு நீ பலமுறை அதை புரிய வைத்திருந்தா அதற்கு நன்றிமா என்று சொல்ல, இதை எல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத பூர்ணிமா அதிர்ச்சியாகி நிற்கிறார்.

அதோடு மாயாவிடம் நாடக கம்பெனியில் இருக்கும் போது போட்ட டான்ஸ் மற்றும் பாட்டை பாட சொல்ல அதற்கு மாயா அது போலவே ஒன்னு ஒன்னு ரெண்டு தான் என்று ஒரு காமெடி டேன்ஸ் போட்டு இருந்தார். ஒருவேளை மாயாவிடம் பூர்ணிமாவின் அம்மா கோபத்தை காட்டி இருந்தால் இன்று மாயா உடைந்து போய் இருப்பார். ஆனால் பூர்ணிமாவின் பெற்றோர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து மாயா சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications