பிக் பாஸ் 7: நேற்று மாயாவின் மூக்கை உடைத்த விசித்ராவின் கணவர்.. கண்கலங்கிய தினேஷ்.. நெகிழ வைத்த காட்சி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் நேற்று விசித்ராவின் கணவர் மற்றும் குழந்தைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர்.
அப்போது மாயா சொன்ன வார்த்தைக்கு விசித்ராவின் கணவர் யாரும் எதிர் பார்க்காத செயலை செய்திருக்கிறார்.. என்ன நடந்தது என்பதை விரிவாக்க பார்ப்போம்.

ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் மட்டும்தான் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இதனால் ஃப்ரீஸ் டாஸ்க் எப்போது வரும் அதில் உறவினர்களின் வருகையின் போது உணர்வு பூர்வமான பல சம்பவங்கள் நடக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.
அதன்படியே இந்த வாரம் முழுக்க உறவினர்களின் வருகை பிக் பாஸ் வீட்டிற்குள் நிகழும் என்று பிக் பாஸ் கூறியிருந்தது. அதுபோல முதல் நாளே அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம், விஜய் ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் தினேஷ், நிக்சன், மணி, ரவீனா என ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சிலர் பொறுப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லோருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கின்றனர்.
ஆனால் சில போட்டியாளர்களின் குடும்பத்தினர் வெளியே நடக்கும் சம்பவங்களை வீட்டிற்குள் போட்டுக் கொடுத்துவிட்டு போய் இருக்கின்றனர். இப்படியான நிலையில் விசித்ராவின் குடும்பத்தினர் நேற்று வந்திருந்தனர். ஃப்ரீஸ் டாஸ்க் ஆரம்பமான முதல் நாளிலிருந்து விசித்திரா தன்னுடைய குடும்பத்திற்காக அதிகமாக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முதலில் மெயின் டோர் வழியாக விசித்திராவின் கணவர் வந்திருந்தார்.

பிறகு விசித்திராவிற்கு ஏமாற்றத்தை கொடுத்து அவருடைய மகன்கள் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தனர். இப்படி உணர்வுபூர்வமான நேற்றைய நாளில் சில நெகிழ வைத்த செயல்களும் நடந்தது. இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷும் விசித்ராவும் தான் அதிகமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். தினேஷ் எதற்கெடுத்தாலும் விசித்திரா தப்பு என்று சொல்வதும் விசித்திரா எதற்கெடுத்தாலும் தினேஷ் தப்பு என்று சொல்வதையும் பார்த்திருப்போம்.
ஆனால் நேற்று முன்தினம் தினேஷின் பெற்றோர் வந்திருந்த போது விசித்திராவிடம் அவர்கள் நன்றாகவே பேசி பழகி இருந்தனர். அதை பார்த்து உள்ளே இருந்த அனைவருமே அதிர்ச்சியில் இருந்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே தினேஷின் அம்மா விசித்திராவை கட்டி அணைத்து கண்கலங்கி அழுதார். அதற்கான காரணம் என்னவென்று விசித்திரா எத்தனையோ முறை கேட்க அதை பற்றி சொல்லாமலேயே வெளியே வந்திருந்தார்..

இந்த நிலையில் நேற்று தினேஷிடம் விசித்ராவின் கணவர் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது முதல் ஆளாக தினேஷ் விசித்திராவின் கணவரிடம் கட்டிப்பிடித்து அவரை வரவேற்று இருந்தார். அதற்குப் பிறகு விசித்திராவும் அவருடைய கணவரும் பேசிக் கொண்டிருக்கும்போது கூல் சுரேஷ் ஒரு முறை என்னால் இவங்க கூட ஒரு நாள் முழுக்கவே இருக்க முடியலையே, இவங்க கணவர் ரொம்ப பாவம் என்று சொன்னார்.
அதைக் கேட்டு எனக்கு ரொம்பவே சிரிப்பு வந்துவிட்டது என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டாரே என்று விசித்ராவின் கணவர் பேசி சிரித்துக்கொண்டிருக்க அதற்கு விசித்திரா அவர் இருந்திருந்தால் இன்னும் என்னை பத்தி நிறைய கம்ப்ளைன்ட் பண்ணி இருப்பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பக்கத்தில் இருந்த மாயா அதற்கு தான் உள்ளே தினேஷ் இருக்காரே,
அவருக்கும் விசித்திராவுக்கும் எப்போதும் சண்டை விசித்திரா அம்மாவை எப்போதும் குறை சொல்லிட்டே இருப்பாரு என்று ஏற்றுவிட பார்க்க அதற்கு விசித்ராவின் கணவர் நான் எல்லாத்தையும் பார்த்தேன்.. அதெல்லாம் விட்டுருவோம் என்று தட்டிவிட்டார்... இவர் இப்படி ஒரு வார்த்தை சொல்வார் என்று எதிர்பார்க்காத மாயாவின் முகம் டக்கென்று மாறிவிட்டது.
அதற்குப் பிறகு விசித்திரா அவருடைய குழந்தைகள் மற்றும் கணவரோடு வெளியே எல்லாரும் முன்பு பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய கணவரிடம் காதலை சொல்லி கொண்டிருந்தார். அப்போது அதை தினேஷ் கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார். தன்னுடைய மனைவி இந்த சீசனில் வருவார் என்று அதிகமாக எதிர்பார்த்து இருந்த தினேஷுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது.
ஆனாலும் நேற்று தன் கண்முன்னே விசித்திராவும் அவருடைய கணவரும் அன்பை பரிமாறி கொண்டதை பார்க்கும்போது சந்தோஷத்தோடு தினேஷின் கண்களில் சோகம் கரைபுரண்டு ஓடியது. நேற்று விசித்ராவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து நடந்து கொண்ட விதம் குறித்து உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications