Bigg Boss 7 grand finale:கடைசி நேரத்தில் தினேஷுக்கு கிடைத்த அவார்ட்.. அதிர்ச்சியில் மாயா, விசித்திரா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இந்த சீசனில் 24 மணி நேரமும் போட்டியாளர்களை கவனித்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி கண்காணிப்பாளர்கள் ஒன்பது போட்டியாளர்களுக்கு சில தலைப்புகளில் அவார்ட் கொடுத்திருக்கின்றனர்.
அதில் முதல் ஆளாக தினேஷுக்கு அவார்டு கிடைத்ததும் விசித்திரா மற்றும் மாயா இருவர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது யார் யாருக்கு என்ன அவார்டு கிடைக்கப்பட்டது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மாலை 6:00 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியின் லைவில் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு 24 மணி நேரமும் போட்டியாளர்களை கவனித்த கண்காணிப்பாளர்கள் ஒன்பது போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சில அவார்டுகளை கொடுத்து இருக்கின்றனர்.
அதில் முதலாவதாக கேம் சேஞ்சர் என்ற அவார்ட் தினேஷ்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அவார்ட் கொடுக்கப்படும் போது கமல் இது யாருக்கு இந்த நிகழ்ச்சி கண்காணிப்பாளர்கள் கொடுத்திருப்பார்கள் என்று கேட்க, எல்லோரும் ஆளுக்கு ஒரு பெயரை சொல்லிக் கொண்டிருந்தனர். அதிலும் அதிகமானோர் கூல் சுரேஷ்க்காக தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆனால் கடைசியில் கமல்ஹாசன் இது தினேஷுக்கு கொடுக்கப்பட்டது என்று சொன்னதும் மாயா மற்றும் விசித்திரா அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். என்னது என்கிறது போல அவர்கள் பார்த்த பார்வை கேமராவில் கேப்ஷன் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அவார்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தினேஷ் “எனக்கா” இந்த அவார்டு என்று இன்ப அதிர்ச்சி அடைந்திருந்தார். அதோடு அவார்டு அறிவிக்கப்பட்டதும் கூல் சுரேஷ் பெயரை தினேஷும் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில் நான் என்னுடைய ஏவியை பார்க்கும்போது பிரமித்து போனேன். நம்மளை 24 மணி நேரமும் சிலர் கண்காணிச்சு நம்ம செய்ற சின்ன சின்ன விஷயங்களை கூட இவ்வளவு அழகா கேப்சர் பண்ணி இருக்காங்கன்னு எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. நாம ஒரு ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து நடந்து போகும்போது எங்க போறோம் அடுத்து நம்ம என்ன செய்யப் போறோம் என்கிறதை நம்மளை விட துல்லியமாக கணிச்சிருக்காங்க. அதனால தான் நாம என்ன செய்யப் போறோம் என்கிறதை அவங்க புரிஞ்சு வச்சிருக்காங்க. எனக்கு இதை பார்க்கும்போது வியப்பா இருந்து. இப்போ அவங்களே நம்ம பார்த்து கேம் சேஞ்சர் என்கிற அவார்ட் தந்து இருக்காங்க. இதை பார்க்கும் போது எனக்கு டைட்டில் ஜெயித்தது போன்று சந்தோஷமாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications