பிக் பாஸ் 7: கிராண்ட் பினாலே நாளில் பிரதீப் “அந்த” நபர் பற்றி போட்ட பதிவு.. இந்த உள்குத்தை பாத்தீங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். பிரதீப் இதுகுறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதோடு பிரதீப் தனக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தன்னுடைய மனநிலை இப்போது என்ன மாதிரி இருக்கிறது என்பது பற்றியும் இந்த சீசன் டைட்டில் வின்னருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பிரதீப் கூறி இருக்கும் நிலையில் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
அதுபோல தன்னைப் போன்ற கேரக்டரில் இருக்கும் மாயா தனக்கு எதிராக குற்றம் சுமத்தி தன்னை வெளியே அனுப்பி வைத்த போதிலும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பிரதீப் தன்னுடைய கருத்துக்களையும் அந்த போஸ்டில் தெரிவித்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றோடு முடிவுக்கு வர இருக்கிறது. இன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருந்த பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தது.
அதுபோல இந்த சீசனில் ஏற்கனவே கலந்து கொண்டு ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் கூட கடந்த வாரத்தில் உள்ளே வந்திருந்தனர். ஆனால் பிரதீப்க்கு மட்டும் அந்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று கிராண்ட் பினாலேவில் அர்ச்சனா டைட்டில் ஜெயித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
அது குறித்து பிரதீப் தன்னுடைய twitter பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த சீசன் பட்டத்தை அர்ச்சனா வென்று இருக்கிறார். அந்த விஷயத்தை பிரபல பத்திரிகை ஒன்று பதிவிட்டு இருக்கையில் குறிப்பிட்ட அந்த பத்திரிக்கையில் வந்திருக்கும் செய்தி உண்மையா தான் இருக்கும்னு நம்புறேன். வாழ்த்துக்கள் அர்ச்சனா... நல்லா இரு.. என்று பிரதீப் பதிவிட்டு, குறுக்க இந்த கௌசிக் வந்தா? என்ற கேஸ் டாக்கை பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் அதை தொடர்ந்து இன்னொரு பதிவில் எனக்காக அழுது போறவரவன் கிட்ட எல்லாம் சண்டை போட்டு எனக்காக எடிட் பண்ணி வீடியோஸ் எல்லாம் போட்டு என்னை ட்ரெண்ட் பண்ணிட்டே இருக்கிற என் அன்பு உள்ளங்களே மிகவும் நன்றி...! என்று அதில் அவர் கூறி இருக்கிறார்.
அதோடு நான் சோகமாக எல்லாம் இல்லை. நீங்களும் சோகமா இருக்காதீங்க. ஜாலி பண்ணலாம்.. அநியாயத்துக்கு அநியாயம் பண்றீங்க என்று தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய போகும் தருணத்தில் இனியும் எந்த வன்மமும் வேண்டாம் யாரையும் குறை கூற வேண்டாம் நாம் ஜாலியாக இருக்கலாம் என்று தொடர்ச்சியாக பிரதீப் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது இணையத்தில் அதிகமாக விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரதீப் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று மக்கள் ஆரம்பத்திலேயே கூறிக் கொண்டிருந்த நிலையில் சில வாரங்களிலேயே பிரதீப்க்கு எதிராக அவரோடு ஆரம்பத்தில் இருந்து நன்றாக இருந்த நபர்களே முதுகில் குத்தி இருந்த நிலையில் இப்போதும் பிரதீப்க்கு ஆதரவாக ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு கொண்டிருப்பதை காண முடிகிறது. அதற்கு பிரதீப் தன்னுடைய நன்றியை வித்தியாசமாக தெரிவித்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications