இன்று மனம் போல் மஞ்சள் கார்டு.. முக்கியமான விஷயத்தை விட்டுட்டாரே கமல்.. அப்போ இது ஏமாற்று வேலை தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில டிசம்பர் 9ஆம் தேதி கான மூன்றாவது ப்ரோமோ இருக்கிறது.
அதில் நிக்சனுக்கு மட்டுமில்லாமல் தினேஷ் மற்றும் மணிக்கும் கமல்ஹாசன் மஞ்சள் கார்டு காட்டி மிரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் இது நிக்சனை திட்டுவது போன்று அவரைக் காப்பாற்றுவதற்காக தானா இந்த நாடகம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்சன் மற்றும் அர்ச்சனா சண்டை பெரு பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது நிக்சன் அர்ச்சனாவை பார்த்து சீ... நாயே, வெளியில போ, கருமம்... முகரையை பாரு... சொருகிடுவேன் என்ற வார்த்தை எல்லாம் பயன்படுத்தி திட்டி இருந்தார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் நிக்சனுடைய பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதனால் இந்த வாரம் நிக்சனுக்கு கண்டிப்பாக ரெட் கார்ட் கொடுக்கப்படும் என்றும் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் பேசும், பிக் பாஸ் வீட்டிற்குள்ளே பலர் தரம் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனா செங்கொடி தூக்கி தன்னுடைய கம்பளைண்டை சொல்ல அதற்கு கமல்ஹாசன் நிக்சனிடம நீங்கள் சொருகிடுவேன்னு சொன்னிங்களே எங்க சொருகுவீங்க என்று வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமல்ஹாசன் கண்ணை காட்டியது போலவே கண்ணை காட்டி நீங்கள் சொருகுவதற்கு நான் ஒரு இடத்தை பார்த்து வைத்திருக்கிறேன் என்று சொல்லி மஞ்சள் அட்டையை தூக்கி காட்டி இருந்தார்.
இது சிவப்பாக மாறாமல் இருப்பது இனி நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் நடக்க இருக்கிறது என்றும் மிரட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து மூன்றாவது ப்ரோமோவில் மணியிடம் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மணி நீங்க ட்ரூ கலர் கம்மிங் அவுட் என்று சொன்னீங்களே அதனுடைய அர்த்தம் என்ன என்று கேட்க அதற்கு மணி முழித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக தினேஷிடம் நீங்க, என்னப்பா தவளத்தா பேசுற என்று சொன்னிங்களே அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்க, அதற்கு அங்கிருக்கும் பொதுமக்களும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அதற்கு கமல் என்ன நீங்க நார்த் மெட்ராஸ் சொன்னீங்களா என்று தினேஷிடம் கேட்க அதற்கு தினேஷ் ஆமாம் என்று தலையாட்ட அதற்கு அப்படி பிராண்டு குத்த நீங்க யாரு என்று கமல்ஹாசன் கோபமாக பேசி, உங்களுடைய ஸ்லாங் மாறுவதற்கு காரணம் அதுதான்.
மணி சொன்ன ட்ரு கலர்ஸுக்கும் காரணம் அதுதான். இன்னொரு முறை வயலன்ஸ் குடுச்சுன்னா இந்த கார்டு உடைய கலர் மாறும் என்று தினேஷ் மற்றும் மணி, நிக்ஸன் மூவருக்கும் மஞ்சள் அட்டையை தூக்கி கட்டி இருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வரும் நிலையில் கடைசியாக பிரதீப் விஷயம் நடந்த போது காணாமல் போன மஞ்சள் அட்டையை இப்போ கமல்ஹாசன் கண்டுபிடித்து விட்டாரா? என்று பலர் கேள்வி எழுப்ப,
இன்னும் ஒரு சில ரசிகர்கள் ஏற்கனவே ஒருத்தருக்கு சிவப்பு அட்டை கொடுத்து கமல்ஹாசன் வாங்கி கட்டிக் கொண்டது போதாதா அதனால் தான் இந்த முறை மஞ்சள் அட்டையை மனம் போல் எல்லோருக்கும் தூக்கி காட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இதையெல்லாம் இவ்வளவு நீட்டி பேசும் கமல் வினுஷாவை நிக்சன் உருவ கேலி செய்தது குறித்து இன்றாவது கேட்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications