இறுதி கட்டத்தில் பிக் பாஸ் 7.. டாஸ்கில் வென்று பூர்ணிமாவை வெறுப்பேற்றிய மணி.. கடைசியில் டுவிஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் 94-வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இன்று ஜனவரி 3ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸில் புது டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டாஸ்க் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
அதில் முதல் கட்டத்தில் ஜெயிக்கும் போட்டியாளர்கள் தான் இரண்டாவது கட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.அந்த வகையில் இரண்டாவது கட்டத்தில் மூன்று முக்கிய போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் செய்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் இப்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். அதில் விஷ்ணு நேரடியாக பைனலுக்கு தேர்வாகி இருக்கிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் விஷ்ணு ஜெயித்ததால் அவருக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மீதமுள்ள ஏழு போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்திருக்கின்றனர். இதனால் யார் வீட்டை விட்டு வெளியே போக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல இந்த வாரமும் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்றிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ரசிகர்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் காலை வரை உள்ள நிலவரப்படி ஏழு லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்க் ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் புது டாஸ்க் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
அதில் முதல் டாஸ்க்கில் ஜெய்பவர்கள் மட்டும் தான் இரண்டாவது கட்டத்தில் பங்கேற்க முடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி கார்டன் ஏரியாவில் இருக்கும் தடைகளை கடந்து வரவேண்டும், அவ்வாறு வரும் முதல் மூன்று நபர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படி முதல் கட்டத்தில் மணி, பூர்ணிமா, விஜய் மூவரும் வெற்றி பெற்று இரண்டாவது கட்டத்திற்கு தேர்வாகி இருக்கின்றனர்.
அதில் ஒரு பஸர் ரவுண்டு நடைபெறுகிறது அப்போது வீட்டில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகிறது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த ரவுண்டில் உன்னை போல் ஒருவன் டாஸ்கில் விஷ்ணுவின் கதாபாத்திரத்தை ஏற்றது யார் என்று பிக் பாஸ் கேட்க அதற்கு மணி விஜய் என்று போக்கிரி பொங்கல் என்ற பாட்டுக்கு ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடி சொல்கிறார்..

அது தவறு என்று பூர்ணிமா அந்த பசரை அழுத்துகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு தவறாக புரிந்து கொண்டு மணி பூர்ணிமா முன்பு ஆட்டம் போட்டு இருந்தார் ஆனால் கடைசியில் மணிக்கே பல்பு கிடைத்திருக்கிறது. அதோடு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் நேரத்தில் சுவாரசியமான டாஸ்க் நடைபெறும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த சொதப்பல் டாஸ்க்கள் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கும்.
இந்த சீசன் முழுக்கவே பெரிய அளவில் கஷ்டம் இல்லாத டாஸ்க்கள்தான் கொடுக்கப்படுகிறது. தந்தை உருட்டுவதும் வாயால் வார்த்தைகளை உருட்டும் டாஸ்க்குகள் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த டாஸ்க்கும் வழக்கம் போல பெரிய அளவில் சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications