Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணப்பெட்டியை தூக்கியவர் இவரா? ப்ரோமோவில் காணாமல் போன அந்த போட்டியாளர்.. கடைசியில் எல்லாம் வீணா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 3ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் மட்டும் காணாமல் போய் இருக்கிறார். அதை குறிப்பிட்டு ரசிகர்கள் அப்போ இவர்தான் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பணப்பெட்டியில் ஒரு லட்ச பணத்தோடு நேற்று டாஸ்க் தொடங்கி இருந்த நிலையில் இன்று 8 லட்சம் வரைக்கும் வந்திருக்கிறது.

இந்த நிலையில் 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு போட்டியாளர் மட்டும் காணாமல் போயிருக்கிறார். அதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 7 January 3rd promo 3 contestants dinesh missing

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்த படியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். ஆனாலும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்று உறுதியாக கூற முடியாத நிலையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதற்கு முந்தைய சீசன்களில் ஒரு சில வாரங்களிலேயே இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் உறுதியாக தெரிவித்து விடுவார்கள். ஆனால் அது கடைசி நேரத்தில் நடக்காமல் போன கதையும் உண்டு... ஆனாலும் தொடர்ச்சியாக தங்களுக்கு பிடித்த ஒரு போட்டியாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் கூட்டம் இணையத்தில் அலை மோதும்.

ஆனால் இந்த சீசனில் அப்படி பார்க்க முடிவதில்லை. ஒருநாள் நன்றாக ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் போட்டியாளர்கள் அடுத்த நாளே முதுகுக்கு பின்னாடி மற்றவர்களை குறை பேசி ஏதாவது வம்பில் சிக்கி விடுகிறார்கள். அதனால் பெரிய அளவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தொடர்ச்சியாக ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்காத நிலை தான் இருக்கிறது.

இப்படியான நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வருகிறது. அதற்கான கடைசி டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து பணப்பெட்டி டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்டிருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 8 போட்டியாளர்களில் யார் அதை தூக்கிக்கொண்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே உள்ளிருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் இன்னும் பணம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஹைப் ஏத்திக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியான நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தினேஷ் மட்டும் மிஸ் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த டாஸ்க் தொடங்கப்பட்ட போது நான் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தால் எடுப்பது பற்றி யோசிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதே நான் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று உறுதியாக கூறிக் கொண்டிருந்தார். ஆனால் டாஸ்க்கில் மட்டும் 10 லட்சம் வந்ததும் எடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். அதனால் இவர் எப்படியும் பணத்தை எடுக்க மாட்டார் என்று வெளியே இருக்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் கூறி வந்திருந்தனர்.

இப்படியான நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தினேஷ் மட்டும் ஒரு இடத்தில் கூட காட்டப்படவில்லை. இதனால் இவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாரா என்று பலர் டுவிட்டர் பக்கத்தில் சல்லடை போட்டு தினேஷ் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Bigg Boss Tamil Season 7 January 3rd promo 3 contestants dinesh missing

அதே நேரத்தில் கடைசி நேரத்தில் பணப்பெட்டி முன்பு டாஸ்க் ஆடிக் கொண்டிருக்கும் மாயா அர்ச்சனாவின் கைகளை பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது கூட அதில் ஒன்பது லட்சம் தான் இருக்கிறது. அதனால் அதை கண்டிப்பாக தினேஷ் எடுத்திருக்க மாட்டார். ஒருவேளை இந்த கிளிப்சுகளில் அவர் மாட்டாமல் இருந்திருப்பாராக இருக்கலாம் ஆனால் அவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வர ஆளே கிடையாது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+