பிக் பாஸ் 7: வீட்டுக்கு போறேன் கதறிய ஜோவிகா.. பதிலடி கொடுத்த வனிதா.. கடைசியில் இப்படி இறங்கிட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோவில் ஜோவிகா நான் வீட்டுக்கு போகிறேன் என்று அழுதபடியே பேசி இருக்கிறார்.
தன்னை கேங்க் சேர்ந்து விளையாடுகிறேன் என்று பலர் இங்கே குறை சொல்கிறார்கள் என்று வேதனையில் ஜோவிகா பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் ஜோவிகாவின் அம்மாவான நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோவிகா மற்றும் குழந்தைகளுக்கு அட்வைஸ் கொடுக்கிற மாதிரி பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் வாரத்திலேயே ஜோவிகா ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டார். காரணம் படிப்பு விஷயத்தில் விசித்திராவோடு ஏற்பட்ட பிரச்சனையில் தைரியமாக ஜோவிகா பேசிய விதம் பலராலும் பாராட்டப்பட்டது. படிப்பு இல்லை என்றால் தனக்கு இருக்கும் திறமையை வைத்து தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்று போல்டாக ஜோவிகா பேசியிருந்தார்.

ஆரம்பத்தில் அதிகமான பாசிட்டிவ் கருத்துகள் இவருக்கு வந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து மாயா கேங்கோடு ஜோவிகா சேர்ந்த பிறகு ஜோவிகா விளையாட்டு குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா எப்போதும் போல அதனுடைய ரிவ்யூவை முடித்துவிட்டு தன்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி அவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது.
அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து சில நாட்களாக பிக் பாஸ் ரிவ்யூ செய்யாமல் இருந்த வனிதா மீண்டும் தைரியமாக தன்னுடைய ரிவியூவை தொடங்கி இருக்கிறார். நான் ரிவியூ செய்யக்கூடாது, என்னுடைய முகத்தை வெளியே காட்டக்கூடாது என்பதற்காக தானே அந்த மர்ம நபர் என்னுடைய முகத்தை காயப்படுத்தினான்.
ஆனால் நான் அதற்கு பயப்பட மாட்டேன் என்று வனிதா மீண்டும் ரிவ்யூ தொடங்கி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜோவிகா கதறி அழுதபடி நான் வீட்டுக்கே எங்க அம்மாவிடம் போறேன் என்று கூறியிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஜோவிகா அதிகமாக தூங்குவது கேமராக்களில் காட்டப்படுவதற்கு, வனிதா தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை உள்ளே இருக்கும் ஜோவிகாவிற்கு உணர்வுபூர்வமாக தெரிகின்றது. தன்னுடைய அம்மாவிற்கு ஏதோ நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக ஜோவிகா உணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவள் சோகமாக இருக்கிறார்.
சோகமாக இருப்பதால் ஜோவிகாவிற்கு தூக்கம் வருகிறது என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் இப்போது அவர் கதறி அழுது இருக்கும்போது வனிதா தன்னுடைய instagram பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில்," நம் பிள்ளைகள் நமக்குத் தேவைப்படுகிறதை காட்டிலும் நம்முடைய ஆன்மாவுக்கு தேவை... சில நேரங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
அதுபோல இன்னொரு ஸ்டோரியில் "முன்பெல்லாம் உங்களை யாராவது வெறுத்தால் நீங்கள் தவறு செய்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் இப்போது நீங்கள் நல்லது செய்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்று வைத்திருக்கிறார். அதுபோல மற்றொரு ஸ்டோரியில் "நான் நல்ல மனிதனாக இருக்க விரும்புவதில்லை என்பதை உணர்ந்தபோது என்னுடைய வாழ்க்கை நன்றாக மாறிவிட்டது.
நைஸ் என்னை அழுத்தமாகவும் அவ மரியாதையாகவும் ஆக்கியது. நான் ஒரு நல்ல மனிதன், நான் உண்மையான மனிதன் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது" என்று புரியாத புதிராக இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கும் நிலையில் என்ன வனிதா அக்கா இப்படி இறங்கிவிட்டார். இது மகளுக்கு கொடுக்கும் அட்வைஸ்சா இல்லை தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் ஆறுதலா? என்று பல கேள்வி எழுப்புகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications