2 நாள் முன்னாடியே எனக்கு தெரிஞ்சிருச்சு.. ஜோவிகா சொன்ன பகீர்.. அப்போ வனிதா சொன்னது உண்மைதானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருந்தார்.
ஜோவிகா வெளியே வருவதற்கு முன்பு கமலிடம் பேசும் போது தான் வெளியே இந்த வாரம் போய் விடுவேன் என்று இரண்டு நாளுக்கு முன்பே எனக்கு தெரிந்து விட்டது என்று பேசி இருக்கிறார்.

ஏற்கனவே ஜோவிகாவின் அம்மா வனிதா தனக்கு முகத்தில் அடிபட்டு இருப்பது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜோவிகாவிற்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் சோகமாக இருக்கிறார் என்று சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் நமக்கு சிலர் பேசுவது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது போல தான் நேற்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜோவிகா கமல்ஹாசன் முன்பு பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏற்கனவே நடிகை வனிதாவிற்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் முகத்தில் தாக்கி காயப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜோவிகா சில நாட்களாக அடிக்கடி தூங்கிக்கொண்டே இருக்கிறார் என்று வனிதாவிடம் கேள்வி கேட்டதற்கு என்னுடைய முகத்தில் தாக்கப்பட்டிருப்பது ஜோவிகாவிற்கு ஏதோ உள் உணர்வால் தெரிந்து இருக்கிறது. அதனால் தான் மனக்குழப்பத்தில் ஜோவிகா சோகமாக இருக்கிறார்.
அதனால் ஜோவிகாவிற்கு அதிகமாக தூக்கம் வருகிறது என்று விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று எபிசோடில் கமல்ஹாசன் நாமினேஷன் ஆகி இருந்த விக்ரம் மற்றும் ஜோவிகா இருவரில் யார் வெளியே போவார்கள் என்று எல்லோரிடமும் கேட்டிருந்தார். அப்போது எல்லோரும் சிலர் ஜோவிகா என்று கூறியிருந்தனர்.
ஒரு சிலர் விக்ரம் என்றும் கூறியிருந்தனர். அப்போது ஜோவிகாவிடம் கேட்டதற்கு நான் தான் இந்த வாரம் போவேன் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டு நாளைக்கு முன்பே எனக்கு நான் இந்த வாரம் வீட்டை விட்டு போய் விடுவேன் என்று தோன்றியது. அதுபோல பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு கனவு வந்தது நான் பிக் பாஸ் வீட்டை விட்டு போவது போன்று அதில் இருந்தது.
அதோடு நான் கமல் சாரோடு மேடையில் நின்று என்னுடைய பயண வீடியோவை கனவில் பார்த்தோன் என்றும் கூறியிருந்தார். அதுபோல நான் ஹாஸ்டலில் இருந்து படிக்கும் போது கூட அம்மாவை பார்க்க போகிறேன் என்றால் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்துவிடும் என்றும் ஜோவிகா கூறியிருந்தார். இது பலரையும் வியக்க வைத்தது. சிலரை விமர்சிக்கவும் வைத்தது.
எப்படிடா இப்படி எல்லாம் என்றுமம் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து நேற்று ஜோவிகா வனிதாவோடு வனிதா ரிவ்யூ செய்யும் நிகழ்ச்சியில் லைவில் பேசியிருந்தார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி தான் சீக்கிரமாக விரிவாக பேசுவேன் என்றும் கூறியிருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications