பிக் பாஸ் சொன்னதையே மறந்துட்டாங்களா? 3 பேர் என்று சொல்லி 2 பேர் மட்டும் ஏன்? லீக்கான ரகசியம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் மூன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கிறார்கள் என்று பிக் பாஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இரண்டு பேர் மட்டுமே வைல்ட் கார்ட் என்ட்ரியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஒரு போட்டியாளர் ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது.

அதே நேரத்தில் மூன்றாவதாக ஒரு போட்டியாளரை பிக் பாஸ் தேர்வு செய்து வைத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் தன்னால் வர முடியாது என்று கூறி விட்டதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. என்ன நடந்தது யார் அந்த போட்டியாளர் என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறது. அதை போலத்தான் கடந்த வாரம் பூகம்பம் டாஸ்க் நடைபெற்றது. அதில் தோற்றால் மூன்று பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வருவார்கள் அதுபோல மூன்று பேர் எலிமினேட் ஆகி வெளியேறுவார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
பிரதீப் பற்றி வீட்டிற்குள் போட்டுக் கொடுத்த விஜய் வர்மா.. மாயா கேட்ட கேள்வி.. நிக்சன் அடித்த பல்டி
ஆனால் மூன்று பேர் என்று கூறிய பிக் பாஸ் இப்போது அக்ஷயா மற்றும் பிராவேவை மட்டும் எலிமினேஷன் செய்து வெளியே அனுப்பிவிட்டு விஜய் வர்மா மற்றும் அனன்யாவை உள்ளே அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால் இரண்டு பேர் என்று பிக் பாஸ் சொன்னதையே மறந்து விட்டாரா? இரண்டு பேரை மட்டுமே வெளியே அனுப்பிவிட்டு இரண்டு பேரை உள்ளே கொண்டு வந்திருக்கிறாரே ஏன் இந்த திடீர் மாற்றம் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் வெளியேறியவர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வருவது சகஜம் தான். சில சீசன்களில் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் உள்ளே அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் இப்போது உள்ளே இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வைல்ட் கார்டாக பழைய போட்டியாளர்கள் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது புதியதாக இருக்கிறது.
ஆனாலும் கடந்த வாரத்தில் பிக் பாஸ் சொன்ன அடிப்படையில் மூன்று போட்டியாளர்களில் வினுஷாவை பிக் பாஸ் குழு தேர்வு செய்து வைத்திருந்ததாகவும் ஆனால் வினுஷா வெளியேறிய போது மிச்சர் படத்தை வைத்து சேனல் தரப்பிலேயே வினுஷாவை கலாய்த்து இருந்தது. அதுபோல பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நிக்சன் உருவகேலி செய்ததும் வினுஷாவிற்க்கு பெரிய அளவில் காயத்தை கொடுத்திருந்ததால் அவர் மன வேதனையில் இருப்பதால் தனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதுபோல வினுஷாவிற்கு அடுத்ததாக யுகேந்திரனும் அந்த லிஸ்டில் இருந்தாராம் ஆனால் அவர் பிரதீப்புக்கு ஆதரவாக தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று சேனல் தரப்பில் முடிவெடுத்து இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி வலம் வருகிறது. ஆனால் இதில் எவ்வளவு உண்மை தன்மை என்பது தெரியவில்லை. எப்படியோ கடைசி நேரத்தில் தான் ஏதோ ஒரு போட்டியாளர் தன்னால் வர முடியாது என்று மறுத்திருக்கிறார்.
அதனால் தான் இரண்டு போட்டியாளர்களை மட்டுமே வெளியே தூக்கி விட்டு இரண்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி வைத்திருக்கின்றனர். இல்லை என்றால் கடந்த வாரம் கண்டிப்பாக விக்ரம் வெளியே தூக்கப்பட்டு இருப்பார். எப்படியோ யார் யார் எடுக்கிற முடிவோ யார் யாருக்கு சாதகமாக அமைகிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications