பிரதீப் பற்றி வீட்டிற்குள் போட்டுக் கொடுத்த விஜய் வர்மா.. மாயா கேட்ட கேள்வி.. நிக்சன் அடித்த பல்டி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜய் வர்மா மற்றும் அனனியா இருவரும் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அப்போது விஜய் வர்மாவிடம் பிரதீப் பற்றி மாயா சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த விஜய் வர்மா மற்றும் அனனியா இருவரும் நிக்சனிடம் கேட்ட கேள்வியாய் நிக்சன் மனதொடிந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இல் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாக இருந்த நிலையில் 5 போட்டியாளர்கள் வெளியான நேரத்திலேயே 5 புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு சிலர் வெளியேறிய நிலையில் நேற்று ஏற்கனவே வெளியே அனுப்பப்பட்ட விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவரும் வைல்ட் கார்டாக உள்ளே வந்திருக்கின்றனர்.
அவர்கள் இருவருமே வீட்டிற்குள்ளே வந்ததும் போட்டியாளர்கள் விளையாடி கொண்டிருக்கும் விளையாட்டு பற்றி மறைமுகமாக தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். இதனால் அதிர்ச்சியான சிலர் இவர்கள் இருவரிடமும் வெளியே விளையாட்டு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு இருக்கின்றனர்.
அப்போது விஜய் வர்மாவிடம் மாயா பிரதீப்பிடம் நீ எதுவும் பேசினியா அவன் என்ன சொன்னான் என்று கேட்டதற்கு அதற்கு விஜய் வர்மா, ஆமாம் நான் பேசுவேன். பிரதீப் நீ எனக்கு பண்ணுனதெல்லாம் பெரிய விஷயமே இல்ல என்று சொல்லிட்டான். அவன் இப்பவும் சந்தோஷமா தான் வெளியே இருக்கிறான் என்று சொல்லி இருந்தார். ஆனால் ரெட் கார்டு கொடுத்ததால் வெளியே ரசிகர்கள் பிரதீப்புக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை பற்றி உள்ளே விஜய் வர்மா சொல்லவில்லை.
அதே நேரத்தில் அனன்யா பிரதீப் பற்றி ஏதாவது சொல்வாரா என்று பலர் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இவர்கள் இருவரிடமே கூல் சுரேஷ் பிரதீப்பின் நிலவரம் குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் விஜய் மற்றும் அனன்யா இருவருமே நிக்சன் வினுஷாவை உருவ கேலி செய்தது பிறகு அதைக் குறித்து உண்மையை சொல்லாமல் வினுஷா விடம் மன்னிப்பு கேட்டதும், அதனால் வெளியே வினுஷா கோபமாக இருக்கிறார் என்பதை பற்றி உளறி கொட்டி இருந்தனர்.
இந்த நிலையில் வெளியே நம்முடைய பெயர் கெட்டுப் போகிறது என்பதை புரிந்து கொண்ட நிக்சன், நான் நீங்க எல்லாரும் சொல்றீங்க என்பதற்கு கேட்கவில்லை. நான் தெரியாமல் செய்தது தவறாக போயிருக்கிறது என்பது எனக்கு இப்போ புரிகிறது. அதனால் யார் என்ன சொன்னாலும் சரி நான் வெளியே போன பிறகு வினுஷாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுவேன் என்று பேசியிருக்கிறார்.
இதுவரைக்கும் நான் யாரைப்பற்றியும் தவறாகவே பேசவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நிக்சன் தன்னைப் பற்றிய குட்டு உடைந்ததும் மன்னிப்பு கேட்டிருப்பது குறித்து பலர் விமர்சித்து வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications