பிக் பாஸ் 7 லைவ்: பூர்ணிமா பணத்தை தூக்கியதும் அழுத விசித்திரா.. போற போக்குல ரகசியத்தை உடைச்சுட்டாங்களே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று பணப்பெட்டி டாஸ்க் 16 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு பூர்ணிமா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேர லைவில் இப்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதில் பூர்ணிமா பணப்பெட்டியை தூக்கியதும் விசித்திரா கண்கலங்கி அழுது இருக்கிறார்.
அதோடு பூர்ணிமா எடுத்த இந்த முடிவு சரியானது என்று உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பூர்ணிமாவை பாராட்டி இருந்தனர். இப்போது பூர்ணிமா தான் இந்த வீட்டிற்குள் எல்லாரையும் கஷ்டப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று அனைவர் முன்பும் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார். அதோடு பிக் பாஸ் பற்றிய ரகசியங்களையும் பூர்ணிமா உடைத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்று பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டியில் இருந்த 16 லட்சம் ரூபாய் தூக்கிக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கிறார். ஆனால் அது 24 மணி காட்சியில் இன்று தான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக முதல் ப்ரோமோவில் பூர்ணிமா பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார் என்பதை காட்டி இருந்தனர்.

இந்த நிலையில் அப்போது என்ன நடந்தது என்பது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரத்தில் லைவாக இப்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதில் பூர்ணிமா மாயா அர்ச்சனா மூவரும் கார்டன் ஏரியாவில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு முகமூடி அணிந்த நபர் வருகிறார். அவர் வழக்கம்போல அங்கு வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியில் இருந்த கார்டை எடுத்துவிட்டு 16 லட்சம் என்ற கார்டை வைக்க அதை பார்த்து பூர்ணிமா இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
கூடவே நான் இந்த கார்டை தூக்கி விடுகிறேன் என்று சொல்ல, அதற்கு மாயா முதலில் யோசித்து செய்யுங்கள் என்று சொல்கிறார். பிறகு சரி உங்க இஷ்டம் நீங்களே பார்த்துக்கோங்க என்று சொல்லி விடுகிறார். அதனால் தான் பணத்தை எடுக்க போவதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள் வந்து எல்லாரையும் கூப்பிட யாரும் முதலில் நம்பவில்லை. இவர்கள் பிராங் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது விசித்திராவிடம் பூர்ணிமா நான் உண்மையில் பணத்தை எடுக்க போகிறேன் என்று சொல்ல, அதற்கு விசித்திரா நம்பாமல் உண்மையாகவா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லாரையும் கூப்பிட்டுக்கொண்டு பூர்ணிமா கார்ட்டன் ஏரியாவில் வைத்து பிக் பாஸ் இடம் நான் இந்த 16 லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்கிறேன் என்று அறிவிக்க அதனால் பிக் பாஸ் நீங்க பணப்பெட்டியை தூக்கியதும் லிவிங் ஏரியாவில் இருந்து ஏதாவது சொல்ல விரும்புறதை சொல்லிவிட்டு போகலாம் என்று சொல்கிறார்.
அப்போது விசித்திரா பூர்ணிமாவை பார்த்து கண்கலங்கி அழுது கொண்டு இருக்க, அதைப் பார்த்ததும் பூர்ணிமா பதறி போய் என்ன ஆச்சு நான் போறதை நினைச்சு அழுறீங்களா? அல்லது நான் பணத்தை தூக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா இவ தூக்கிட்டாலேனு நினைச்சு அழுகிறீர்களா? என்று நக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து லிவிங் ஏரியாவின் அனைவரிடமும் பூர்ணிமா பேசிக் கொண்டிருக்கையில் நான் எத்தனை நாட்களாக உங்களை பலமுறை தாக்கியிருக்கிறேன் அதனால் உங்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கீழே விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
ஆனால் நீங்கள் எல்லாரும் என்னை பல நாள் அழ வைத்து இருக்கீங்க அதுக்காக உங்களை மன்னிப்பு கேட்கணும்னு சொல்ல மாட்டேன். இந்த வீட்டுக்குள்ள நாம இன்றோடு 97 நாள் இருக்கிறோம். இதுவே நான் செஞ்ச பெரிய சாதனைதான்.(பிக் பாஸ் வீட்டிற்குள் என்று 95 ஆவது நாள் என்று காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. ) நான் இந்த வீட்டில் கடைசி வரைக்கும் இருந்திருக்கிறேன் என்று சந்தோஷமாகத்தான் இந்த வீட்டை விட்டு போறேன் எப்படியும் இன்று நான் வீட்டை விட்டு வெளியே போனாலும் அடுத்த வாரம் வீட்டிற்குள் வந்து விடுவேன் என்று கூறி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் அவரை மெயின் டோர் வழியாக வெளியே வர சொல்லி இருந்தார். அப்போது மெயின் டோர் பக்கத்தில் வந்ததும் காசு மேல காசு என்ற பாடலுக்கு எல்லா போட்டியாளர்களுடன் சேர்ந்து பூர்ணிமா டான்ஸ் ஆடி இருந்தார். அப்போது கூட கப்பு இதுல யார் ஜெயித்தாலும் சரி, நாம எல்லாரும் சேர்ந்து ட்ரிப் போறோம் என்று ஒரு பஞ்ச் வசனத்தை பேசிவிட்டு பூர்ணிமா வெளியே செல்ல, மாயா முத்த மழை பொழிந்து அனுப்பி வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications