பிக் பாஸில் பரபரப்பு.. விசித்திராவிற்கும் அர்ச்சனாவிற்கும் கடுமையான சண்டை.. வெளிவந்த ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 லைவ் நிகழ்ச்சியில் விசித்திராவும் அர்ச்சனாவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் என்ன நடந்தது என்பதை முழுமையாக இந்த செய்திகள் பார்க்கலாம்.வைல்ட் கார்டு என்ட்ரி ஆக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்தபோது சில போட்டியாளர்கள் அர்ச்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் விசித்திரா தான் அர்ச்சனாவிற்கு பக்கபலமாக இருந்தார்.

ஆனால் இப்போது விசித்திரா அர்ச்சனாவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். தனக்கு ஆதரவாக தினேஷிடம் சண்டைக்கு போகாத காரணம் என்ன என்று கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஆகி இருக்கிறது அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்கிற மாதிரி தான் இன்று 24 மணி நேர எபிசோட் சில காட்சிகள் ரசிகர்கள் எதிர்பார்க்காதபடி நடைபெற்றிருக்கிறது. அதாவது ஆரம்ப காலகட்டத்தில் ஒரே அணியாக இருந்த விசித்திராவும் அர்ச்சனாவும் இப்போது ஒளிபரப்பாகி வரும் 24 மணி நேர காட்சிகளில் சண்டை இட்டு கொண்டிருக்கின்றனர்.

 Bigg Boss Tamil Season 7 live Vichithira and Archana are fighting

ஏற்கனவே விசித்திரா சில வாரங்களாகவே தினேஷ் மீது தன்னுடைய மொத்த கோபத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறார். தினேஷ் எது செய்தாலும் தன்னை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்வதாகவே விசித்திரா பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் கூட ரவீனா விசித்திராவை பாத்திரம் கழுவுவதற்காக கூப்பிட்ட போது அது தினேஷ் சொல்லித்தான் கூப்பிட்டு இருப்பார் என்று சொல்லி தினேஷின் பர்சனல் வாழ்க்கையை கேமரா முன்பு பேசி இருந்தார்.

இது குறித்து கமல்ஹாசனும் விசித்திராவிற்கு வார்னிங் கொடுத்திருந்தார். ஆனாலும் கமல்ஹாசன் போன பிறகு நான் தினேஷை பற்றி பேசுவது தவறே இல்லை என்று மீண்டும் விசித்திரா பேசியிருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விசித்திரா அர்ச்சனாவிடம் நீ முன்ன மாதிரி இல்ல முன்னாடி எல்லாம் ஒரு பிரச்சனை என்றால் உடனே குரல் கொடுத்து கேள்வி கேட்ப இப்போ யாரிடமும் நீ சண்டை போட மாட்டேன் என்கிற என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அர்ச்சனா எனக்கு இப்போ சண்டை போட வேண்டிய அவசியமே இல்ல. நான் இதுவரைக்கும் வேலை பார்த்த இடங்களில் பெரிய அளவில் நட்பை சந்திக்கவே இல்ல.

அதனால இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிய போகிறது இந்த நேரத்தில் நான் யாரிடமும் சண்டை போட்டு இங்கேயும் விரோதத்தை விதைக்க விரும்பல நான் வெளியே போனாலும் இங்கு இருப்பவர்களை பார்க்கும் இடங்களில் சிரித்தபடி அவர்களிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக நான் இப்போது பேசாமல் இருக்கிறேன் என்று சொல்ல அது எப்படி? அப்போ நீ முன்னாடி இருந்தது நடிப்பா என்று விசித்ரா கேட்கிறார்.

அதற்கு அர்ச்சனா அது நடிப்பு இல்லை அதுதான் நான் ஆனா இப்போ பட்ட அடியினால நான் திருந்தி இருக்கேன். எங்க அப்பா அம்மா இங்க பேமிலி ரவுண்டில் வந்தாங்கலா அப்போ எங்க அப்பா என்ன சொன்னாங்கன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இவ பண்ணுறத பார்த்து நான் பிபி மாத்திரை போட்டு தூங்குறேன்னு சொன்னாரு. அதுக்கு பிறகு நான் புரிஞ்சுகிட்டேன் யார்கிட்டயும் தேவையில்லாம சண்டை போடக்கூடாதுன்னு.

ஆனா நீங்க இப்போ உங்களுக்கும் தினேஷுக்கும் இருக்கிற பிரச்சனையில் என்னை சண்டை போட சொல்றீங்க .அது எனக்கு அவசியம் இல்லை என்று சொல்ல, தினேஷ் உடைய அம்மா அப்பா வரும்போது உங்ககிட்ட எப்படி பேசிட்டு போனாங்க அவங்க அழுத போது நீங்க அவங்க கிட்ட பேசுனது எல்லாம் நடிப்பா என்று அர்ச்சனா கேள்வி கேட்க, அதற்கு பக்கத்தில் இருந்த மாயா, அர்ச்சனா விசித்ரா உன்னை சண்டை போட சொல்லல நீ ஆரம்பத்தில் அழுதுகிட்டு இருந்தபோது உனக்கு ஆறுதலா இருந்தது விசித்திரா தானே?

அதனால இப்போ நீ விசித்திராவுக்கு ஆறுதலா தினேஷிடம் கேள்வி கேட்கலாமே என்று தான் சொல்றாங்க என்று ஏத்தி விடுகிறார். அதற்கு அர்ச்சனா ரெண்டு பேரும் நீங்க மாறி மாறி பேசிக்கிட்டே இருக்கீங்க நாங்க எது சொன்னாலும் கேட்பதில்லை. நான் தினேஷ் ப்ரோ கிட்டையும் எடுத்து சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல அதை ஏற்றுக் கொள்ளாத விசித்திரா மீண்டும் நீ ஆரம்பத்தில் எவ்வளவு சண்டை போட்ட, ஆனா இப்போ சண்டை போட எனக்கு புடிக்கலைன்னு சொல்லுறா இதுல எது உண்மைன்னு எனக்கு தெரியல கடைசி நேரம் வந்ததும் நடிக்கிறியா என்று கேட்க...

அதற்கு கோபமான அர்ச்சனா நான் நடிக்க வேண்டிய அவசியமே இல்ல நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன் என்னோட மனநிலை என்ன என்பதை. நான் கமல் சார் முன்பே சொன்னேன் இங்க இருந்து நான் போகும்போது ரெண்டு பேரோட அன்பையாவது நான் பெறணும்கிறத நோக்கத்துல தான் இருக்கிறேன். ஆனா நீங்க நான் நடிக்கிறேன், டைரி போட்டு ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்திருக்கிறேன் என்றெல்லாம் என்னை பாத்து சொல்றீங்க.

 Bigg Boss Tamil Season 7 live Vichithira and Archana are fighting

அப்படி பாத்தா நீங்களும் தான் நிறைய பண்ணி இருக்கீங்க. ஆனா நான் உங்களை மாதிரி கேமரா முன்பு நடிச்சுக்கிட்டு இருக்கல. நீங்க கேமரா முன்பு நடிக்கிறீங்க என்பதை கமல் சார் கூட போனவாரம் சொல்லிட்டாரு என்று சொல்லியபடி அங்கிருந்து வேகமாக கிளம்பி போய் விடுகிறது. இதனால் கோபமான விசித்திரா மாயாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். இது இப்போது ஒரு மணி நேரமாக 24 மணி நேர லைவில் நடந்த சண்டை தான். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பது பற்றி தட்டி விடுங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+