பிக் பாஸ் 7: இங்க என்ன நடக்குது? மணியை கதறவிட்ட அம்மா.. ரவீனா செய்த செயல்.. விமர்சிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
அதில் மணியின் அம்மாவும் அப்பாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்த நிலையில் அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த கேள்வியை கேட்டு இருக்கின்றனர்.
அதற்கு ரவீனா மழுப்பலான பதிலை சொல்ல அது குறித்து இணையத்தில் அதிகமானோர் விமர்சித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில டாக்ஸ்குகள் சம்பிரதாயமாக ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் ஒரு டாஸ்க் தான் ஃப்ரீஸ் டாஸ்க். இந்த டாஸ்கில் எப்படியாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து விட வேண்டும் என்று எல்லா போட்டியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தான்.
கடந்த சீசனில் கூட இதற்காகத்தான் பல பேர் போராடிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது அதிலும் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியதும் இதில் மறக்க முடியாத பல நினைவுகள் ரசிகர்களின் மனதில் இருக்கும். அதிலும் சாண்டி மாஸ்டரின் குழந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது. அதுபோல ஆரியின் குழந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது போன்ற இனிமையான சம்பவங்களும் நடந்திருக்கிறது.
அதே நேரத்தில் லாஸ்லியா தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பேசியது, அதற்காக லாஸ்லியா கதறி அழுதது யாராலும் மறந்திருக்க முடியாது. அதுபோல இதுபோன்ற ஃப்ரீஸ் டாஸ்க்கில் தான் கவினுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிரதீப் கவினை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அதுபோல ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சிவானியை மட்டுமல்லாமல் பாலாஜி முருகதாசையும் கதற விட்டிருந்தார். இப்படி பல சம்பவங்கள் இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் நடத்திருக்கிறது. அதுபோல இந்த சீசனில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். அதிலும் இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் மட்டுமே இருந்த நிலையில் இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கிலாவது ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கிடைக்கும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பு.
அந்த வகையில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் இரண்டாவது வெளியான ப்ரோமோவில் மணியின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். அப்போது மணி இடம் மணியின் அம்மா டேய் இங்க என்ன நடக்குது என்று ரவீனாவை கண்ணைக் காட்டி கேள்வி கேட்க அதற்கு ரவீனா சிரித்தபடியே சமாளித்திருக்கிறார்.
ஏற்கனவே ரவீனாவின் விளையாட்டு மணியால்தான் கெட்டுப் போகிறது என்று ரவீனாவின் அம்மா கூறி இருக்கிறார். வெளியே ரவீனாவும் மணியும் அண்ணன் தங்கையாக தான் இருந்தார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீனாவை சுயமாக மணி முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார் என்று ரவீனாவின் அம்மா பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
இந்த நிலையில் இப்போது மணியிடம் ரவீனாவை கண்ணகாட்டி என்ன நடக்கிறது அவருடைய அம்மா என்று கேட்டிருக்கிறார். இதனால் இன்றைய எபிசோட்டில் இதை வைத்து ஏதாவது பிரச்சனை நடக்குமா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.. ஏற்கனவே இந்த வாரத்தில் ரவீனா வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.
அது போல பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பூர்ணிமாவின் பெற்றோர் விசித்ரா மற்றும் அர்ச்சனாவிடம் பேசுவதை பார்த்து பூர்ணிமா அதிர்ச்சியாகி இருக்கிறார். அதுவும் தற்போது வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கும் நிலையில் இன்று எபிசோட்டில் ரசிகர்களுக்கு செமையான சம்பவம் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications