பிக் பாஸ் என்ன இவ்வளவு மோசமாகிட்டு? அக்கா தம்பின்னு சொல்லிட்டு இப்படியா? கழுவி ஊற்றும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்கா தம்பி என்று சொல்லி வந்த நிக்சன் மற்றும் பூர்ணிமா நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதுவும் ஒரு சில நாட்களாக இவர்கள் இருவரும் அதிகமாக கட்டிப்பிடித்துக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அக்கா தம்பி உறவை மீறி வர்ணித்து கொள்வதையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி வர வர ரொம்ப ஆபாசம் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது என்று பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இப்போது அதில் பத்து போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது.
அதே நேரத்தில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான சர்ச்சைகளும் வெடித்து கொண்டிருக்கிறது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த சீசனில் அதிகமான 18+ காலடி, இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள், கெட்ட வார்த்தைகள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அதனால் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் பெயர்களை பெற்று வருகின்றனர் அதில் மாயா மற்றும் பூர்ணிமாவும் உண்டு. அது போல நிக்சன் ஆரம்பத்தில் இருந்து ஐசுவிடம் நடந்து கொண்ட விதம் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் பூர்ணிமா மற்றும் நிக்சன் செய்யும் செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. நிக்சன் தன்னுடைய தம்பி மாதிரி என்று பூர்ணிமாவும், பூர்ணிமா என்னுடைய அக்கா மாதிரி என்று நிக்சனும் அடிக்கடி பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது அப்படி தெரியவில்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதாவது இந்த சீசனின் ஆரம்பத்தில் நிக்சன் ஐசுவிடம் தனக்கு பிடித்த பொண்ணு எப்படி இருக்கணும் என்று வர்ணித்து இருப்பார். அப்போது வினுஷா எனக்கு பிடிச்ச மாதிரி கிடையாது. ஆனால் பூர்ணிமாவுக்கு தான் எல்லாம் எனக்கு புடிச்ச மாதிரி இருக்கு என்று சொல்லி இருப்பார்.

அது பற்றி பிக் பாஸ் ஒருமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் யார் யாரெல்லாம் யாருக்கு தெரியாமல் பேசியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி போட்டுக் கொடுத்த போது கூட தன்னை பற்றி நிக்சன் இந்த மாதிரி பேசியதற்கு பூர்ணிமா சந்தோஷமே அடைந்திருந்தார். அது போல இப்போது பூர்ணிமா மற்றும் நிக்சன் இருவருக்கும் டான்ஸ் ஆடி இருந்தனர்.
அதில் டான்ஸ் ஆடி முடித்ததும் பூர்ணிமாவும் மாயாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தன்னிடன் நிக்சன் உங்களை யாரும் ப்ரொபோஸ் பண்ணலையா? நீங்க டான்ஸ் ஆடும் போது ஒரு மாதிரி இருக்கு... அழகா இருக்கீங்க என்று என்னிடம் சொன்னான். எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு என்று சொல்லி சிரித்திருக்கிறார். இதனால் நிக்சன் தனது காஜி தனத்தை மீண்டும் காட்டி வருகிறார்.
அதற்கு ஏற்றார் போல பூர்ணிமாவும் நிக்சன் வர்ணிப்பதை ரசித்து தன்னை நிக்சன் இப்படி சொல்லிவிட்டான் என்று பூரித்து போகிறார் என்று பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். நீங்கள் இருவரும் நெருங்கி பழகி வருகிறீர்கள் இதை வேறு ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அக்கா, தம்பி என்று பெயர் வைத்து அண்ணன் தங்கை முறையை கேவலப்படுத்தாதீர்கள் என்று பலர் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications