இவளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கணும்.. அர்ச்சனாவை வசை பாடிய நிக்சன்.. குவியும் கண்டனங்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் தலைவராக இருந்த நிக்சன் அர்ச்சனாவை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்க வேண்டும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சரியாக சமைக்க தெரியாததால் அர்ச்சனாவை நிக்சன் மேலே சொன்ன மாதிரி திட்டி இருக்க அப்போது அருகில் இருந்த விசித்திராவும் சிரித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த விசித்திரா இப்போது கருத்து வேறுபாடால் பிரிந்திருக்கும் நிலையில் அர்ச்சனாவை பற்றி நிக்சன் விசித்ரா ரவீனா போன்றோர் பேசி சிரித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது உளவியல் சார்ந்த நிகழ்ச்சி தான். ஒரு வீட்டிற்குள் தொடர்ச்சியாக 100 நாட்கள் பிரபலங்கள் சிலர் இருக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த பொழுது போக்கும் இல்லாமல் இருக்கும் நிலையில் வீட்டிற்குள் இருப்பவர்களை பற்றி மாறி மாறி புறம் பேசிக் கொள்வதுதான் வாடிக்கையாக இருக்கும். இதை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
அந்த வகையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனிலும் அதிகமான போட்டியாளர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் முதுகுக்கு பின்னாடி பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
தங்களை சுற்றி பல கேமராக்கள் இருப்பதை மறந்து உள்ளே பிரபலங்கள் நடந்து கொள்ளும் விதம் அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமான ஒரு சில வாரங்களிலேயே நிக்சன் வினுஷா தேவியை உருவ கேலி செய்தது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல இப்பொழுது நிக்சன் பேசிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது கடந்த வாரத்தில் நிக்சன் தான் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்தார். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவிற்கு தான் சமையல் அதிகமாக தெரியாமல் இருக்கிறது என்று அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே பன்னீர் பட்டர் மசாலா ரெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் பெட்டில் விசித்திரா, நிக்சன், ரவீனா மூன்று பேரும் இருக்கின்றனர். அப்போது விசித்ரா ரவீனாவிடம் சமையல் முடிந்து விட்டதா என்று கேட்க, அதற்கு ரவீனா இல்லை இப்போது தான் ரெடி ஆகிகிட்டு இருக்கு என்று சொல்கிறார். அதற்கு இந்த அர்ச்சனாவால் தான் சமையலுக்கு எப்போதும் நேரமாகிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிக்சன் இவளை எல்லாம் கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்கணும்.
இவ்வளவு தூரம் வளர்த்திருக்கக் கூடாது என்று பேசி இருக்கிறார். அதற்கு விசித்ரா மற்றும் ரவீனா இருவரும் சிரித்து இருக்கின்றனர்.. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வினுதா தேவியை பார்த்து நிக்சன் உருவ கேலி செய்தது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அர்ச்சனாவை பற்றி நிக்சன் இப்போது பேசி இருப்பதற்கும் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications