பிக் பாஸ்7: இவங்க ஜெயிக்கிறதுக்காக விளையாடல.. போட்டியாளர்களைப் பற்றி புட்டு புட்டு வைத்த கமல்ஹாசன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் நவம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடின் முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் இந்த வாரம் நடந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்காக முதல் ப்ரோமோவிலே வந்திருக்கிறார்.
அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பற்றியும் உள்ளே போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் தன்னுடைய கருத்தை கமல்ஹாசன் கூறி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதை தொடர்ந்து ஐந்து போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு வந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர்.
அதில் ஒரு போட்டியாளர் தான் இந்த வார எலிமினேஷனில் வெளியேறப் போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் பல சண்டை சச்சரவுகள் நடந்து வந்தது.இந்த நிலையில் அறிமுகமான நான்கு நாட்களிலும் விஜே அர்ச்சனா தன்னுடைய கருத்துக்களை பல இடங்களில் தைரியமாக எடுத்துச் சொன்னாலும் தினமும் நாள் தவறாமல் அழுது கொண்டும் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிறைய கனவுகளோடு உள்ளே 5 வைல்ட் கார்ட் வந்திருக்காங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பார்த்து இருப்பீங்க. உள்ளே ஜெயிக்கிறதுக்காக விளையாடுறதை விடவும் தோற்காம விளையாடனும் என்றுதான் விளையாடுற மாதிரி எனக்கு தோணுது.
இந்த ஆட்டம் சுவாரசியமா இருக்கா? அதை அவங்களை தான் கேட்கணும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் குறும்படத்திற்காக காத்திருக்கிறோம் ஆண்டவரே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் பிரதீப் மற்றும் கூல் சுரேஷுக்கு இடையே என்ன நடந்தது என்பது சரியாக ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதனால் இதை இன்றைய எபிசோடில் தெளிவுபடுத்துவாரா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications