பவாவை தொடர்ந்து பிக் பாஸை விட்டு வெளியேற முடிவு எடுத்த மாயா.. பூர்ணிமா சொன்னது தான் ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 13 ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சக போட்டியாளர்களுக்கு எதிராக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த வாரத்தில் மாயாவை வெளியேற்ற முடியவில்லை என்று ரசிகர்கள் ரசிகர்கள் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இவர்கள் பேசுவது குறித்து அதிகமான கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் அடிக்கடி வெடித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது யார் சண்டையை தூண்டுவார்கள்? எப்போது யார் பிரச்சனை செய்வார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் போட்டியாளர்களின் நடவடிக்கை இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒரு பக்கம் கலகலப்பாகவும் இருந்தது. ஆனால் ஆறாவது சீசனில் அதிகமான சண்டை சச்சரவுகளும் அடிதடி வரைக்கும் நடைபெற்றது. ஆனால் ஏழாவது சீசன் இதற்கெல்லாம் மேலே என்று சொல்வது போன்று தான் ஒவ்வொரு ப்ரோமோவிலும் சண்டைக் காட்சிகள் தான் தவறாமல் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே படிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனை போன வாரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்றைய எபிசோட்டில் ஜோவிகாவும் பிரதீப்பும் சண்டை இட்டது, ஜோவிகா பிரதீப்பை மரியாதை இல்லாமல் பேசியது குறித்து இணையத்தில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அது போல இந்த வார தலைவராக இருக்கும் சரவணனுக்கு ஆளுமை இல்லை. ஆனால் அவர் மனிதாபிமானத்தனத்தோடு நடந்து கொண்டிருக்கிறார் என்று பல்வேறு சம்பவங்கள் பிக் பாஸுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பூர்ணிமாவும் மாயாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா பூர்ணிமாவிடம் நீ அவங்ககிட்ட போய் சேர்ந்திடு இல்லன்னா அவங்க எல்லாரும் உனக்கு பிளான் போடுவாங்க என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா எனக்கு என்னவோ இந்த வீட்டில இதுதான் லாஸ்ட் வீக் என்கிற மாதிரி ஒரு ஃபீல் வந்துடுச்சு என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா உன்னையெல்லாம் அனுப்பிச்சிட்டாங்கன்னா நான் வெளியில போயிருவேன்.

இவங்க கூட எல்லாம் என்னால வாழ முடியாது. ஒருவேளை ஐஸ் கேப்டன் ஆயிட்டான்னு வச்சுக்க கேமே வேற. இங்க இருக்கிற யுகேந்திரன், ஜோவிகா எல்லாத்தையும் வச்சி செய்யலாம். செய்யணும்னா நம்மகிட்ட அவங்க வச்சுக்கவே கூடாது, அப்படி செய்யணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது இந்த ப்ரோமோ வெளியானதும் ரசிகர்கள் ஏற்கனவே மாயா மற்றும் பூர்ணி தான் இந்த சீசனின் விஷப்பாட்டில் என்று கூறிவரும் நிலையில் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தாலே இரிடேட்டிங் ஆகுது, அதே நேரத்தில் மாயா இந்த வாரம் வெளியே போய்விடுவார் என்று நினைத்தோம் ஆனால் அவருக்காக தான் பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கூறிவிட்டார்கள் என்று பலர் திட்டியும் வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications