3வது வாரத்திற்கான நாமினேஷன்.. ரூல்ஸை மீறி சிக்கிக்கொள்ளும் பிரபலம்.. இவர்தான் வெளியேற்றமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தங்களுக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பற்றி போட்டியாளர்கள் யாரும் விவாதிக்க கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் அதை மீறி இன்று சில போட்டியாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். அதைத்தொடர்ந்து முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது என்று போட்டியாளர்கள் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை முதல் வாரமே இளம் போட்டியாளர் அதாவது அனன்யா வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதுவரைக்கும் எல்லா பிக் பாஸ் சீசன் களிலும் முதல் வாரத்தில் பெண் போட்டியாளர்கள் தான் எலிமினேஷன் ஆகி வெளியேறி இருக்கிறார்கள். அதிலும் வயதில் மூத்தவர்கள் தான் வெளியேறி இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை இளம் போட்டியாளன் வெளியேறி இருந்தார். அதை தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை தானாகவே முன்வந்து உடல் நிலையை காரணம் காட்டி வெளியேறி இருந்தார்.
அதனால் கடந்த வாரத்தில் எலிமினேஷன் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரத்திற்கு ஆன எலிமினேஷனுக்கான நாமினேஷன் இன்று நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்று நடக்கும் எலிமினேஷனில் யாரெல்லாம் நாமினேசன் செய்யலாம் என்று மாயா, பூர்ணிமா, வினுஷா என சில போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது மாயா இங்கே எல்லாமே ரிவேஞ் கேம் தான் விஷ்ணு எல்லார்கிட்டயுமே சண்டை போட்டு இருக்கார். அதனால விஷ்ணுவிற்கு எல்லாரும் ஓட் பண்ணுவாங்க என்று சொல்கிறார். அதற்கு பூர்ணிமா, பிரதீப்புக்கும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கு என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க என்று பூர்ணிமா மாயாவிடம் கேட்க, அதற்கு மாயா நான் ரவீனாவுக்கும் விசித்திராவிற்கும் போடுவேன் என்கிறார்
அப்போதும் பூர்ணிமா நான் மணிக்கு விசித்ராவுக்கும் போடுவேன் என்று கூறுகிறார். இப்போது இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இதுவரைக்கும் நாமினேஷன் பற்றி போட்டியாளர்களுக்குள் விவாதிக்க கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் அதை மீறி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை இன்றைய முதல் ப்ரோமோவில் அம்பலப்படுத்தி இருக்கின்றனர்.
இதனால் இவர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கை இருக்குமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் மாயா கடந்த வாரம் நாமினேஷனில் இருந்த நிலையில் அவர்தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனால் கடைசியில் எலிமினேஷன் இல்லாததால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் வந்தால் அவர்தான் உறுதியாக வெளியேறுவார் என்பது பலருடைய கருத்தாக கமெண்ட்களில் பதிக்கப்படுகிறது.
ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் பிக் பாஸ்க்கு மாயா மற்றும் பூர்ணிமா மீது கோபம் ஏதும் இருக்கிறதா? அவர்கள் இருவரும் பேசும் கிளிப்சிகளை மட்டும் அடிக்கடி ப்ரோமோவில் போட்டு கொண்டிருக்கிறார்கள்? அப்படி என்றால் இந்த வீட்டிற்குள் வேறு யாரும் இப்படி எல்லாம் விவாதிப்பதே கிடையாதா? என்று மாயா மற்றும் பூர்ணிமாவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications