மாயாவை கலாய்த்து தள்ளி கதறி அழ வைத்த கூல் சுரேஷ்.. குவியும் கருத்துக்கள்.. காலிலே விழுந்துட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 17ஆம் தேதிக்கான முதல் ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் கூல் சுரேஷ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மாயாவை பற்றி கூல் சுரேஷ் சொன்ன வார்த்தைகளால் மாயா கோபமாகி கண்கலங்கி அழுது இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் மட்டும் தான் அதிகமாக இருக்கிறது. இதற்கு முந்தைய சீசனிலும் கூட சில சுவாரசியமான தருணங்களும் நடக்கும். ஆனால் இப்போது கண்டன்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஆளாளுக்கு எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சீசனிலும் இதுதான் நடந்தது.
அதையே பாலோ செய்து இந்த சீசனில் அதைவிட அதிகமாக சண்டை சச்சரவுகள் இருக்கிறது. இந்த நிலையில் முதல் வாரத்தில் நடிகை அனன்யா எலிமினேஷனால் வெளியேற்றப்பட்டு இருந்தார். அவரைத் தொடர்ந்து பவா செல்லத்துரை உடல் நிலையை காரணம் காட்டி அவராக வெளியேறி விட்டதால் கடந்த வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது.

அதில் இந்த சீசனில் அதிகமாக ரசிகர்கள் மாயா மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். அவர் செய்யும் செயல்கள் கோபம் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என்று அவருக்குத்தான் அதிகமான நெகட்டிவர்ஸ் உருவாகி கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த நெகட்டிவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கூல் சுரேஷ் ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆரம்பத்திலேயே விசித்ராவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு இன்றைய ராசிபலன் என்று சொல்லி, "மறைந்து இருந்து பார்க்கும் மாயா... இந்தப் பக்கம் கொஞ்சம் வாயா... ஐயோ வேண்டாம் மாயா.. ரொம்ப காண்டா பாக்குது.." என கலாய்த்து கொண்டிருக்க எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு மாயா நீங்க பேசின நிறைய விஷயம் எனக்கு பிடிக்கல என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார்.

மாயாவுக்கு ஆதரவாக பூர்ணிமா கூல் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்கள் மாயாதான் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேறப் போகிறார் ஆனால் அவர் இன்று அழுதுவிட்டதால் அவர் மீது அனுதாபம் கொஞ்சம் அதிகரிக்கிறதே என்றும் அதே நேரத்தில் என்னதான் இவ்வாறு அழுது கொண்டிருந்தாலும் எப்படியும் இனி கூல் சுரேசை பழிவாங்குவதற்காக பிளான் போட போகிறார் என்று கலாய்த்தும் ஒரு சில நெட்டிசன்கள் கமாண்ட் வெளியிட்டு இருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications