போட்டியாளர்கள் செய்த செயல்.. கோபத்தில் சாப்பாட்டை தடை செய்த பிக் பாஸ்.. வெறுப்பேற்றிய மாயா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் 20ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஷாப்பிங் ரீப்ளேஸ்மென்ட் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்க்கில் தோற்றதால் அவர்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் செய்யும் சாப்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து டாஸ்க் கொடுக்க பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் உள்ளே வந்ததுமே இந்த வார தலைவர் யார் என்று முடிவு செய்யும் வகையில் முதல் ஆளாக வந்த கூல் சுரேஷ் கையில் பேட்ச் கட்டி, அதை பிறகு வந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மாறி மாறி சண்டை போட்டு வாங்கி இருந்தனர்.
இப்படியாக முதல் நாளிலே தொடங்கிய சண்டை இப்போது இரண்டு வாரம் ஆன நிலையிலும் கொஞ்சம் முற்ற தொடங்கி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் சிலிண்டர் டாஸ்க்கில் பிரதீப்பை விஜய் சர்மா தூக்கி அடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதனாலயே பலர் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும், ஏற்கனவே முரட்டுத்தனமாக பேசுகிறார்கள் என்று அவருக்கு எல்லோ கார்ட் கொடுத்திருக்கும் நிலையில் இப்போது அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் உள்ளே போட்டியாளர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் பேசிக் கொண்டிருப்பது ப்ரோமோவில் போட்டு வருகின்றனர். அதனாலேயே அதிகமான ரசிகர்கள் இவரா இப்படி எல்லாம் என்று சொல்கிற மாதிரி தான் சில போட்டியாளர்களின் நடவடிக்கை இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் விசித்திரா புதியதாக வந்திருக்கும் டாஸ்க் பற்றி படித்துக் கொண்டிருக்கிறார். அதில், ஷாப்பிங் ரீப்ளேஸ்மென்ட் டாஸ்க்... கார்டன் ஏரியாவில் வைத்திருக்கும் போர்டில் பந்தை உருட்டிவிட்டு அது கீழே வருவதற்குள் அங்கு இருக்கும் பஸில்ஸை சால்வ் பண்றது தான் டாஸ்க் என்று கூறியிருக்கின்றனர். அதில் யுகேந்திரன் ரவீனா, மணி மூன்று பேரும் விளையாடுகின்றனர்.
அப்போது அவர்கள் டாஸ்க்கில் தோற்று விடுகின்றனர். அதற்கு பிக் பாஸ் நீங்க இந்த டாஸ்க்கில் தோற்றத்தின் விளைவாக பிக் பாஸ் வீட்டார் வீட்டில் சமைக்கப்படும் எந்த உணவுப் பொருள்களையும் உண்ணக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது ரவீனா வழக்கமாக பேசுவது போன்று ஐயோ அப்போ பசிக்கும்லா, நான் சாப்பிடணும்லா... என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாட்டை காட்டி இருப்பவர்களை வெறுப்பேத்துகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது அதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். அதில் அதிகமான கமெண்டுகள் ரவீனா நன்றாகவே விளையாடுகிறார். ஆனால் மணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
மணியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் மட்டும்தான் ரவீனா சரியாக விளையாடுவார் என்றும், இதற்கு கமல்ஹாசன் ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்றும் கருத்துக்களை குவிக்கின்றனர். அதே நேரத்தில் நேற்று யுகேந்திரன் விளையாடியது குறித்தும் பலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications