பிக் பாஸில் பரபரப்பு.. எல்லை மீறி பேசிய பிரதீப்.. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 31ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களுக்கு தலையில் மணி ஒன்றை கட்டி விட்டு அவர்களை ப்ரீஸாக நிற்கும்படி கூறி இருக்கின்றனர்.
அதில் விதியை மீறி விட்டார் என்று கூல் சுரேஷ் பிரதீப்பை பற்றி சொல்ல அதற்கு பிரதீப் கண்டமேனிக்கு திட்டி இருக்கிறார்.

இதனால் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கூல் சுரேஷ் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு கோபமாக வெளியே வருகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களோடு தொடங்கியிருந்த நிலையில் 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஐந்து புது போட்டியாளர்கள் உள்ளே வந்திருக்கின்றனர். உள்ளே வந்ததுமே புது போட்டியாளர்களிடம் பழைய போட்டியாளர்கள் தங்களுடைய வன்மத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
கோபத்தின் உச்சத்தில் வார்த்தைகளாலும் நக்கல் சிரிப்போடு ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் புதிய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பாடாய் படித்தி எடுக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விசித்திராவும் சென்றிருக்கிறார். அவர் ஒரு பக்கம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்படித்தான் நடந்து கொள்கிறார் என்று பிக் பாஸ் வீட்டில் சொல்லி கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் நாம எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முன்பு நாம் அடித்துக் கொண்டு சண்டை போடுவது போன்று இருக்க வேண்டும் என்று நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் எது உண்மை என்பது இன்னும் வெளிச்சமாகவில்லை. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வந்திருக்கிறது.
அதில் அசைஞ்சா போச்சு என்கிற புது டாஸ்க் ஒன்றை வைத்திருக்கின்றனர். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பெல் பொருத்தப்பட்ட ஹெட் இயர் கொடுக்கப்படும். ஹெட் இயரில் உள்ள பெல் ஒலிக்காமல் இருப்பதுதான் டாஸ்க் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பிரதீப் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்.
அப்போது நான் நேர்மையா விளையாடிக்கிட்டு இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாத வேற எங்கேயாவது போய் விளையாடு என்று கூல் சுரேஷை பார்த்து சொல்கிறார். அதைத் தொடர்ந்து யார் யாரெல்லாம் அவுட் என்று சொல்லுங்க என்று பிக் பாஸ் கேட்க அப்போது பூர்ணிமா யாரெல்லாம் தோற்று இருக்கிறார்கள் என்பதை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கூல் சுரேஷ், பிரதீப் என்று சொல்ல அதற்கு கோபமான பிரதீப் என்னை பத்தி சொல்லாத. அவரு மணிய மட்டும் ஆட்டிகிட்டு இருக்க சொல்லு என்று சொல்ல அதைக் கேட்டு கோபமான சுரேஷ் என்னடா என்னடா என்று கேட்க அதற்கு பிரதீப் அப்படித்தான் பேசுவேன் என்று சொன்னதும் ஸ்கூல் சுரேஷ் தான் போட்டிருந்த மைக்கை கழட்டுகிறார்.
அதை தொடர்ந்து வீட்டில் இருக்கும் தன்னுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு நான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கவில்லை என்று வேகமாக கிளம்பி போகிறார். போட்டியாளர்கள் எல்லோரும் கூல் சுரேஷை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications