பிக் பாஸ் 7: முதல் வாரத்திலேயே நடந்த சண்டை சச்சரவு.. கமல் சொன்ன அதிரடி பதில்.. இப்படி சொல்லிவிட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் ஏழாம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
பதில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் முதல் ப்ரோமோவில் இந்த வார பஞ்சாயத்து குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நாங்க கஷ்டப்பட்டு யோசித்து செய்த செயலை இந்த முறை போட்டியாளர்கள் உடைத்து விட்டார்களே என்று பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ரசிகர்கள் அதிகமாக ஆர்வத்தோடு காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கிறது. அதுபோல இந்த சீசனில் ஆரம்பமான முதல் நாளே 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிலும் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்களாகவே இருக்கின்றனர்.
அதிலும் இந்த சீசன் கடந்த சீசனை போலவே ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறது. யார் எப்போது சண்டை போடுவார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் எது பேசினாலும் அங்கே ஒரு வாக்குவாதம் விதண்டாவாதம் என்று சொல்வது போன்று ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் கூட நடிகை வனிதாவின் மகளான ஜோவிகாவும், நடிகை விசித்திராவும் படிப்பு பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அடிப்படைக் கல்வி முக்கியம் என்று விசித்திரா சொல்ல, எனக்கு படிப்பே வரவில்லை அதனால் தான் நான் ஒன்பதாம் வகுப்பு படிப்போடு நிறுத்திவிட்டேன். ஆனால் இன்னும்படி என்று என்னை கட்டாயப்படுத்த கூடாது என்று கோபமாக ஜோவிதாவும் பேசி இருந்தார். அது குறித்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் விவாதித்து கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

விசித்திராவோடு ஜோவிகாவுக்கு பிரச்சனை.. கமலை டேக் செய்து வனிதா போட்ட பதிவு.. அப்பா அனுப்பியதாம்
அந்த வகையில் இந்த சீசனில் முதல் முறையாக நடிகர் கமல்ஹாசன் இன்றைய எபிசோடில் பஞ்சாயத்து செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் "பிக் பாஸ் டீம் ரொம்ப உக்காந்து யோசிச்சு இந்த சீசனில் இரண்டு வீடா ஆக்குனாங்க. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு திட்டம் போட்டு அதை செய்தும் காட்டி மார்தட்டி கொண்டிருக்கும் போது, இவங்க முதல் வாரத்தில் உள்ளே போனதுமே விட ரெண்டாக்கிட்டாங்க, இன்னும் எத்தனை கூறுகளாக இந்த வீட்டை தூண்டு போட போறாங்கன்னு அவர்களிடம் பேசி பார்க்கலாம்" என்று கமல்ஹாசன் முதல் ப்ரோமோவில் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி கண்டிப்பாக கமல்ஹாசன் பேச வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் பாவா செல்லதுரை படிப்பு முக்கியமில்லை என்று கூறியிருந்தார். அதற்கு ஆடியன்ஸ் படிப்பு முக்கியமில்லை என்றால் உங்க புத்தகத்தை எப்படி படிக்கிறது என்று கேள்வி கேட்பது போன்றும் பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கமல் இன்று படிப்பு முக்கியம் என்று சொல்லப் போகிறாரா? அல்லது வாழ்க்கைக்கு படிப்பு எல்லாம் தேவையில்லை என்று கிளாஸ் எடுக்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications