கொளுத்தி போட்ட பிக் பாஸ்.. தாக்கிக் கொள்ளும் போட்டியாளர்கள்.. கடைசியில் இவர் தான் வெளியேற்றமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 8ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்குள் பகையை ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் புது டாஸ்க் கொடுத்து இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களுடைய கேம் எப்படி மத்தவங்களை விட சிறந்தது என்பதை பற்றி சொல்லுங்க என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
அதில் இந்த வாரத்தில் உள்ளிருக்கும் ஆறு போட்டியாளர்களும் மற்றவர்களை விட தாங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை பற்றி விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர். அதனால் புதியதாக கருத்து மோதல்களும் ஏற்பட்டு இருக்கிறது. கடைசி வாரத்தில் நிகழ்ச்சி சுவாரசியமாக்க இப்படி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் மணி பிக் பாஸ் வீட்டிற்குள் சின்ன சின்ன விஷயத்தையும் ஊதி பெருசாக்கிறாங்க என்று அர்ச்சனாவை விமர்சித்திருக்கிறார். அதுபோல யார் யார் என்ன சொன்னார்கள் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பைனல் இன்னும் ஒரு சில நாட்களில் வர இருக்கிறது. அதிலும் இறுதி கட்டத்தில் ஆறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த இந்த சீசனின் வின்னர் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது..
காரணம் இந்த சீசனில் மட்டும்தான் யார் டைட்டில் வின்னர் என்று யூகிக்க முடியாத வகையில் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று யாரையும் குறிப்பிட்டு ரசிகர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் ஒரு நாள் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் போட்டியாளர்கள் அடுத்த நாளே தங்களுடைய செயல்களால் ரசிகர்களை அதிருப்தி ஆக்கி விடுகிறார்கள்.
இப்படி ஆன நிலையில் இறுதி கட்டத்தில் அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணிச்சந்திரா, விஜய் வர்மா என ஆறு போட்டியாளர்கள் நுழைந்து இருக்கின்றனர். இதில் விஷ்ணு நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களின் இந்த வாரம் யாரெல்லாம் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதில் கடந்த வாரத்திலேயே விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரத்தில் விசித்திரா மட்டுமே வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று அல்லது நாளை விஜய் வர்மா மிட்நைட் எவிக்ஷன் ஆக வெளியிடப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த வாரத்தில் ஏற்கனவே வெளியே போன போட்டியாளர்கள் கூட மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார்கள். அதில் பிரதீப் மட்டும் மீண்டும் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதுபோல இன்று வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக டாஸ்க் கொடுத்து இருக்கிறார். அதாவது இன்று வந்த டாஸ்க் லெட்டரை தினேஷ் படிக்கிறார். எப்போதுமே அர்ச்சனா தான் டாஸ்க் லெட்டர் படித்துக் கொண்டிருப்பார். ஆனால் இன்று தினேஷ் படிக்கிறார். அதில் நீங்கள் ஒவ்வொருவருமே உங்களுடைய கேம் எந்த விதத்தில் மத்தவங்க கேமை விட சிறந்தது என்று சொல்லனும் என்று சொல்ல,
இந்த டாஸ்கை கேட்டதுமே அர்ச்சனா கை எடுத்து கும்பிட்டு அட பாவமே என்று சொல்கிறார். காரணம் அர்ச்சனா நான் கடைசி வாரத்தில் யாருடன் சண்டை போட விரும்பவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது இப்படி ஒரு டாஸ்க் வந்தால் நான் சிறப்பானவர்கள் என்பதை சொல்வதற்காக அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டுமே என்று அவர் புலம்பி கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் மாயா, விஷ்ணுவை பார்த்து, இவரை ஈஸியா சொரண்டுனா டபக்குனு ட்ரிகர் ஆகி வேற லெவல் பிளாஸ்டாகிவிடுவாரு என்று சொல்கிறார்.. அடுத்ததாக தினேஷ் அர்ச்சனாவை பார்த்து ஹைலைட்டிங் விஷயங்களை அவங்க அடிக்கடி ஆர்க்யூ பண்ணிட்டே இருப்பாங்க என்று சொல்கிறார்.
அடுத்ததாக மணி வந்து சின்ன சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்கிறாங்களோன்னு எனக்கு தோணுது என்று அர்ச்சனாவை பற்றி சொல்கிறார். அதைத்தொடர்ந்து விஜய் வர்மா, நான் இப்ப வரைக்கும் பார்த்ததில்ல பேக்கேஜ் கேரியர் பண்ணிட்டு இருக்கிறது தினேஷ் தான் என்று சொல்கிறார்.
இப்படியாக பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர். வார்த்தைகளால் இவர்கள் தொடங்கி இருக்கும் இந்த போர் முடிவில் யாரெல்லாம் காயப்பட போகிறார்கள், யாரெல்லாம் வெடித்து சிதற போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications