காரி துப்பிய பூர்ணிமா.. கமலை போலவே கண்டு கொள்ளாமல் விட்ட பிக்பாஸ்.. ஆனா அதுக்கு இப்படி ஒரு விளக்கமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்க்கில் பூர்ணிமா விஷ்ணுவை காரி துப்பியது குறித்து இப்போது இணையத்தில் அதிகமானோர் விமர்சித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் பூர்ணிமாவிடம் மாயா நீ டாஸ்கில் அப்படி துப்பியதை வைத்து இந்த வாரம் பஞ்சாயத்து நடக்குமோ என்று கேள்வி கேட்க, அதற்கு பூர்ணிமா ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா செய்வதை கண்டுகொள்ளாமல் கமல்தான் விட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் இப்போது பிக் பாஸூம் கண்டுகொள்ளாமல் இதை விட்டுக் கொண்டிருக்கிறார்களே என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகமான கெட்ட வார்த்தைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள். அதைவிட இப்போது பூர்ணிமா காரி துப்பும் வித்தையையும் செய்து ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
மாயா மற்றும் பூர்ணிமா என்ன செய்தாலும் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் கண்டு கொள்ளாததை போல இப்போது பூர்ணிமா டாஸ்க்கில் விஷ்ணுவை பார்த்து காரி துப்பியதை பிக் பாஸ் கவனிக்காமல் தூங்கி விடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த வாரத்தில் விக்ரம் வெளியேறும் போது மாயா டோருக்கு வெளியே சென்று வந்ததை பார்த்து பிக் பாஸ் லேசாக வார்னிங்க் கொடுத்து இருந்தார்.

அப்போது கூட விதியை மீறி பிக் பாஸும் முழுமையாக இங்கிலீஷில் பேசி இருந்தார். பிக் பாஸுக்குள் தமிழில் தான் பேச வேண்டும் என்று கமல் ஒவ்வொரு முறையும் கிளாஸ் நடத்திக் கொண்டிருந்தாலும் கமல் கூட பல நேரங்களில் இங்கிலீஷில் பேசுவதை கவனிக்க முடியும். அதுபோல அன்றும் கூட மாயாவிற்கு வார்னிங் கொடுக்க பிக் பாஸ் இங்கிலீஷில் பேசி இருந்தார். அதற்கு மாயாவும் சாரி சார் என்று ஒரே வார்த்தையில் விட்டுவிட்டார்.
அதைத் தொடர்ந்து இப்போது நேற்று நடந்த டிக்கெட் டு பினாலே போட்டியில் தோற்ற நிலையில் பூர்ணிமா விஷ்ணுவை பார்த்து காரி துப்பியது கேவலமான செயல் என்று ரசிகர்கள் பலர் கெட்ட வார்த்தைகளில் பூர்ணிமாவை பார்த்து திட்டி வருகிறார்கள். அராத்தி என யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா முழுமையாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் அராத்தியாகவே இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் விஷ்ணுவை காதலிப்பது போல நடித்து கழட்டிவிட்டு இப்போது சில நாட்களாக நிக்சனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்றும், அதுவும் வெண்ணிலவே பாடலுக்கு அப்படி ஒரு கட்டிப்பிடித்து டூயட் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் அக்கா தம்பி என்று சொல்லி வந்த பூர்ணிமா மற்றும் நிக்சன் இப்போது இருவரும் காதலர்களை விட நெருக்கமாக டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார்கள்.

அதோடு டான்ஸ் ஆடும் போது உங்களுக்கு யாரும் ப்ரொபோஸ் பண்ண வில்லையா? நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க என்று என்னை பார்த்து நிக்சன் சொல்லிவிட்டான் என்று பூர்ணிமா மாயாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டும் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மாயா விஷ்ணுவை பார்த்து காரி துப்பியதை கமல் இந்த வாரம் கேள்வி கேட்பாரா அல்லது வழக்கம் போல தன்னுடைய சொந்த புராணத்தை பாடுவாரா என்று பல பேர் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியான ஒரு வீடியோவில் மாயாவும் பூர்ணிமாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா பூர்ணிமாவிடம் நீ டாஸ்க்கு நேரத்தில் காரி துப்பியதை குறித்து இந்த வாரம் பஞ்சாயத்து இருக்குமா? அது பற்றி விசாரிப்பாங்களானு எனக்கு பயமா இருக்குனு சொல்ல அதற்கு பூர்ணிமா அது எப்படி அவங்க சொல்ல முடியும், ஏன்னா நான் விஷ்ணு முகத்திலையா காரி துப்புனேன்? லேசா தூரமா தானே துப்பினேன். அதுக்கு எல்லாம் ஒரு பஞ்சாயத்து வைக்க முடியாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இதை வைத்தும் அதிகமான ரசிகர்கள் பூர்ணிமா மற்றும் மாயாவை கழுவி ஊற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications