உள்ளே நடந்தது இதுதான்.. ரெட் கார்ட் வாங்கி வெளியே வந்த பிரதீப் போட்ட முதல் எமோஷனல் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக நேற்று பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெளியே வந்ததும் முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது பற்றியும் தன்னுடைய தற்போதைய மனநிலை குறித்தும் அதில் பதிந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் வாங்கிய பொருள்களையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

bigg boss tamil season 7 Pradeep first emotional post that evicted

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எதிர்பாராத திடீர் திருப்பம் நடைபெற்றது. ஏற்கனவே இந்த வாரத்தில் எலிமினேஷனலில் வைல்ட் கார்ட் என்ரியாக உள்ளே வந்த அன்ன பாரதி தான் வெளியே போகப் போகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே பரவி வந்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பல போட்டியாளர்கள் பிரதீப்புக்கு எதிராக செங்கொடி தூக்கி இருந்தனர். இதிலிருந்து ரசிகர்களுக்கு தெரிய தொடங்கிவிட்டது இன்று பிரதீப் வெளியேறப் போகிறார் என்பது. அது குறித்து பல போஸ்ட்களும் மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் சிறிது நேரத்திற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் காட் வாங்கி பிரதீப் வெளியேறி விட்டார் என்ற தகவலும் கசிய தொடங்கி விட்டது. பிரதீப் ஆண்டனி உள்ளே விளையாடிய விதம் குறித்து அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் சில நாட்களாக அவருடைய விளையாட்டு பலருடைய அதிர்ச்சியை பெற்று வந்தது.

குறிப்பாக பெல் டாஸ்க்கில் கூல் சுரேஷ் அம்மா பற்றி திட்டியது அதோடு உள்ளே அடிக்கடி கெட்ட வார்த்தை பேசியது போன்ற விஷயத்தைப் பற்றி பலர் விமர்சித்து வந்தனர். அது மட்டும் அல்லாமல் பெண் போட்டியாளர்களிடம் லவ் கன்டென்ட் என்கிற பெயரில் பழகி வந்ததும் யுகேந்திரனின் அப்பாவையும் தன்னுடைய அம்மாவை பற்றி பேசியதும வீடியோவாக வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இந்த நிலையை நேற்று எபிசோடில் கமல்ஹாசன் முன்பு பல போட்டியாளர்கள் தங்களுக்கு பிரதீப் வீட்டிற்குள் இருப்பதால் உள்ளே இருப்பதற்கே பயமாக இருக்கிறது. இரவு நேரத்தில் தூங்காமல் எழுந்து உட்காரந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்றும், ரவீனா என்னுடைய அரணாகயிறு பற்றி கமெண்ட் செய்கிறார் என்றும், அதோடு பாத்ரூம் கதவை சாத்தாமல் டாய்லெட் போய்க் கொண்டிருந்தார்.

அதைப் பற்றி சொன்னால் கூட தன்னை மிரட்டுகிறார் என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் பலர் வைத்திருந்தனர். இதனால் இவருக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது, நான் இவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று எதிர்பார்க்கல. நான் பண்ணுவது எல்லாம் கரெக்ட்டு என்றுதான் கடைசி வரை நினச்சுட்டு இருந்தேன். ஆனால் ஹவுஸ் மேட் சொல்லும்போது தான் நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கிறேன் என்பது எனக்கே தெரிந்தது.

bigg boss tamil season 7 Pradeep first emotional post that evicted

ஒவ்வொருத்தர் சொல்லும் போதும் நான் மாற்றி இருக்கலாம். என்னால் மாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால் தான் நான் இப்போ வெளியே வந்திருக்கிறேன். வெளியில் வந்ததற்கு பிறகுதான் மக்கள் எனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணி இருக்காங்க என்று எனக்குத் தெரிகிறது. என்னை டைட்டில் வின்னர் ஆக்குகிற அளவிற்கு இருந்திருக்காங்க.

ஆனா நான் இதை கவனிக்காமல் இருந்திருக்கேன். இதற்குப் பிறகு திரும்பவும் என்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்க போறேன். உள்ளே இருக்கிறவங்க யாரு மேலயும் எனக்கு கோபமும் இல்லை. வருத்தமும் இல்லை. இது எல்லாம் கேம்க்காக விளையாடிய தான் என்று அதில் பேசியிருக்கிறார்.

bigg boss tamil season 7 Pradeep first emotional post that evicted

அத்தோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உள்ளே வாங்கிய திராஃபி அனைத்துயும் புகைப்படமாக எடுத்து My BB7 Trophies என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏதோ என்னால் முடிந்தது என்று இவர் டேக் வெளியிட்டு இருக்கும் நிலையில் இதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+