மீண்டும் பிக் பாஸுக்குள் பிரதீப்.. அவரே வெளியிட்ட பதிவு.. சிறப்பான கண்டிஷன்.. 2 பேருக்கு ரெட் கார்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டிருந்தது.

ஆனால் அவருடைய வெளியேற்றத்திற்கு அதிகமானோர் அதிருப்தி தெரிவித்து பிரதீப் வெளியேற்றம் தவறு என்றும் அவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

bigg boss tamil season 7 Pradeep re entry in bigg boss

இதன் நிலையில் பிரதீப் ஆண்டனி தான் நிகழ்ச்சிக்கு வருவது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதோடு தான் நிகழ்ச்சிக்கு வருவதற்கு சில கண்டிஷன் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பார்க்காத ரசிகர்களையும் கடந்த வாரத்திற்கு பிறகு பார்க்க வைத்திருக்கிறது. கடந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி வைத்திருந்தார். உள்ளே ஒரு சில போட்டியாளர்கள் செங்கொடி தூக்கி தங்களுடைய கம்பளைண்டுகளை கமல்ஹாசனிடம் கூறியிருந்தனர்.

அதில் பலர் பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகமான கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார். இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பயன்படுத்துகிறார். இரவு நேரத்தில் தூங்காமல் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். பாத்ரூம் போகும்போது கதவை லாக் செய்ய மாட்டேன் என்கிறார். இப்படியாக பல கம்ப்ளைன்ட் அவர் மீது கொடுக்கப்பட்டு அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு முத்திரையை குத்தி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது.

இது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருந்தது. உள்ளே இருக்கும் எல்லா போட்டியாளர்களுமே கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு இரட்டை அர்த்த வசனங்களை பேசிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதீப்க்கு மட்டும் ஏன் இந்த தண்டனை என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. அதுவும் பிரதீப் செய்தது தவறாக இருந்தாலும் அவருக்கு வார்னிங் கொடுத்து இருக்கலாம்.

அதுபோல கடைசி நேரத்தில் பிரதீப் இடம் அவருடைய தரப்பு நியாயத்தை கேட்கவில்லை என்பது பலருடைய வருத்தமாகவும் இருந்ததால் விஜய் டிவி மற்றும் கமலஹாசன் குறிப்பு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் பிரதீப் ஆண்டனி வெளியே வந்த பிறகு நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு தீர விசாரிப்பதே மெய் என்பது ஹேஷ்டேக்கையும் டேக் செய்து இருந்தார்.

இப்படி இந்த நிலையில் மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்கு வரவேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப் இன்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆட்டத்தை கொடுத்தால் நான் உங்களுக்கு ஒரு சிறந்த காட்சியை கொடுப்பேன் என்று விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனை டேக் செய்து அதில், நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

ஒரு படத்தின் இடைவேளை முடிந்த பிறகு படத்தோட இரண்டாவது பாதியில் வரும் ரிவெஞ்ச் மோடில் தான் நான் இனி விளையாடுவேன் என்றும் அதுபோல இன்னொரு பதிவில் ரொம்ப ஷார்ப்பான புள்ளைங்களால தான் அது முடியும் என்று நெருப்பு இமோஜியை பதிவிட்டு, நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை ரெட் கார்டு கொடுக்க வேண்டும்.

அதுபோல நான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஏழாவது வார கேப்டனாக இருக்க விரும்புகிறேன் என்றும் அந்த பதிவில் கூறியிருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+