பிக் பாஸ் 7: நேற்று மணி செய்த நெகிழ வைத்த செயல்.. ஆதரவுக்கு வரும் ரசிகர்கள்.. இதுதான் பலருடைய நிலைமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்று ரவீனாவின் உறவினர்கள் வந்து மணி செய்ததுதான் தவறு தங்கள் பொண்ணு மேல தவறு இல்லை என்பது போல பேசி இருந்தனர்.

bigg boss tamil season 7 Raveenas relatives talked as if it was wrong Mani

தன்னை நோக்கியே பல அம்புகள் வந்த போது மணி தன்னுடைய அண்ணன் மகள் வந்த நேரத்தில் செய்த செயல் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. அது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறவினர்களின் வருகை சம்பிரதாயம் போல ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் ரீசெட் டாஸ்க் எப்போது தொடங்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அந்த வகையில் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்த நினைவுகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கும். அதிலும் முதல் சீசனில் கவிஞர் சினேகனின் அப்பா வந்து அனைவரையும் கண்கலங்க வைத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவரை கண்டித்தது, அதுபோல சாண்டி மாஸ்டரின் குழந்தை பலருடைய மனங்களை கவர்ந்தது, அதை தொடர்ந்து ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவரை திட்டியது. ஆரியின் குழந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் க்யூட்டாக சிரித்தது, அதுபோல ஆரியின் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே நடக்கும் செயல்களை சொல்ல வரும்போது ஆரி நான் வெளியே வந்து எல்லாம் தெரிந்து கொள்கிறேன் என்று தடுத்தது போன்ற பல நினைவுகள் ரசிகர்களின் மனதில் இருக்கும்.

அந்த வகையில் இந்த சீசனிலும் நேற்று நடந்த ஒரு நிகழ்வு பலருடைய மனதை கவர்ந்து விட்டது. அதாவது நேற்று ரவீனாவின் உறவினர்கள் வந்திருந்தனர். உள்ளே வந்ததும் ரவீனா செய்த சில தவறுகளை சுட்டி காட்டி இருந்தனர். பிறகு எல்லாத்துக்கும் காரணம் மணிதான் என்பது போல மணியையே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் மணியை தனியாக அழைத்து மணியிடமும் வார்னிங் கொடுத்து இருந்தனர். ரவீனா உனக்கு பணத்தை தரும்போது நீ ஏன் தடுக்கல, வாங்க மறுத்திருக்கலாமே? என்றும் கேட்கிறார்கள். அதுபோல நிக்சனுக்கு சப்பாத்தி ஊட்டுனா இவன் ஏன் கண்டிக்கிறான் என்று கேட்டு ஆனால் விஷ்ணுவும் தினேஷும் இவ தப்பு பண்ணுனா கண்டிக்கணும் என்று சொல்லி இருந்தனர். அது போல இரண்டு பேரும் ஏன் தனியா ராத்திரி பேசினீங்க நிக்சன் கூட தொட்டு தொட்டு போகும் தென்றல் பாட்டுக்கு ஏ ஆடல,

அந்த மோதிரத்தை திரும்ப வாங்கு என்று மணிக்கு எதிராக பேசி மணியை பதில் சொல்ல முடியாமல் ஆஃப் பண்ணி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் கலங்கி போயிருந்த மணிக்கு யாரும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆதரவு சொல்லவில்லை. அதே நேரத்தில் நிக்சன் மணி செய்ததுதான் தவறு என்பது போலவே ரவீனாவில் உறவினர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்படியான நேரத்தில் தான் மணிக்கு ஆறுதல் தரும் ஒரு சம்பவம் நடைபெற்றது.

ஆமாம் மணி வீட்டில் இருந்து அவருடைய அண்ணனும் அண்ணன் மகளும் வந்திருந்தனர். ஆரம்பத்தில் அந்த குழந்தையிடம் இயல்பாக இருப்பது போல சிரித்து விளையாடிய மணியால் ஒரு கட்டத்தில் தன்னுடைய சோகத்தை அடக்க முடியாமல் அவருடைய தோளில் முகம் புதைத்து தன் துக்கங்களை கண்ணீராக வெளிக்காட்டினார். அந்த நேரத்தில் அந்த பாப்பா மணியின் கண்ணீரைத் துடைத்து விட்டு மணியின் சோகத்திற்கு மருந்தாக இருந்தது.

இந்த க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரைக்கும் மணி பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகவில்லை என்றாலும் நேற்று நடந்த சம்பவத்தில் காரணமாக பலரும் மணியை பாராட்டி வருகிறார்கள். மணி மற்றும் ரவீனா இருவருமே ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அதில் மணியை மட்டுமே நேற்று ரவீனாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்த நிலையில் தன் தரப்பு நியாயத்தையும் எடுத்து சொல்ல முடியாத நிலையில் தான் நேற்று தன்னுடைய அண்ணன் மகள் முன்பு மணி கண்ணீர் சிந்தியிருந்தார். இதுதான் பலருடைய வாழ்க்கையில் நிகழ்கிறது. தங்களுக்கு பிடித்தவர்களுக்காக தங்கள் பல இடங்களில் அவமானங்களை இப்படித்தான் அமைதியாக சந்தித்துக் கொள்கிறார்கள் என்பது நேற்று பலருக்கும் விளங்க வைத்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+