பிக் பாஸ் சீசன் 7இல் அதிரடியாக களம் இறங்கும் "சர்ச்சை” நடிகர்.. அப்போ "அவங்களோட” நிலை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் விரைவில் 7வது சீசன் தொடங்க இருக்கிறது.
7வது சீசன் ஜூலை கடைசி வாரத்திலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் சர்ச்சை நடிகராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு யாரெல்லாம் அதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். யாரெல்லாம் அதில் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று சில தகவல்கள் கசிந்து வருவது வழக்கம்தான். அந்த வகையில் பல தகவல்கள் உறுதி படுவதும் ஒரு சில தகவல்கள் கடைசி நேரத்தில் பொய்யாகி விடுவதும் ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த முறை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஒரு சில பிரபலங்கள் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தொகுப்பாளினி பாவனா, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சரத், மாகாபா, உமாரியாஸ் கான் மற்றும் தொகுப்பாளர் மற்றும் நடிகையான ரேகா நாயர் போன்றோர் கலந்து கொள்வதாக ஏற்கனவே செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது பயில்வான் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் பரபரப்பாகவும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு.
காரணம் பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள், நடிகர்கள் பற்றி தொடர்ச்சியாக தன்னுடைய கருத்துக்களை கூறி வருகிறார். அந்த வகையில் நடிகை ரேகா நாயர் பற்றி அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு சில நாட்களுக்கு முன்புதான் ரேகா நாயர் பயில்வான் மட்டும் என்னுடைய கண்ணில் பட்டால் அவ்வளவு தான் என்று கூறி, அவர் செத்தால் நான் வெடிவைத்து கொண்டாடுவேன் என்றும் கூறியிருந்தார்.
அப்படி இருக்கையில் ஒரே நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டால் என்ன ஆகும்? என்பது பலருடைய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே youtube இல் பலரைப் பற்றி பலவிதமாக பேசி பிரபலம் அடைந்து கொண்டிருக்கும் பயில்வான் இந்த நிகழ்ச்சியில் போனால் தன்னுடைய நிலைமை என்ன ஆகும்? என்பது தெரிந்து கொண்டிருப்பார். அதனால் எப்படியும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்த்து முடிவு தெரியும்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications