பிக் பாஸ் 7இல் “ஏழரை” இந்த பிரபலம் தான்.. நடிகை வனிதா பரபரப்பு கருத்து.. இப்படி ஒரு விஷயம் இருக்காமே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்து ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமாக இருக்கும் நடிகை வனிதா பரபரப்பு கருத்து தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸின் இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ் ஏழரையை கூட்டுபவராக இருக்கிறார். அவரால்தான் பிரச்சனை வரும் என்று அதில் வனிதா கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் வனிதாவுடைய கருத்திற்கு அதிகமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். அதில் அதிகமானோர் ரசிகர்களுக்கு பரீட்சையமான பிரபலங்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகையும் பிக் பாஸ் பிரபலமாக இருக்கும் வனிதா சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதிலும் நடிகை வனிதா கூல் சுரேஷ் பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். அதில் கூல் சுரேஷ் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர் தான். அதுபோல கூல் சுரேஷுக்கு யூட்டியூபர்கள் பண்ணுகிற வீடியோவோ அல்லது நிகழ்ச்சிகளும் மூலமாக கூட புகழ் கிடைத்திருக்கிறது. அதனாலேயே அவருக்கு உருவாகி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் கூல் சுரேஷ் தன்னை எங்கேயும் நடிகர் சிம்புவின் ஃபேன் என்று சொல்லி அதிலிருந்து தான் பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி பிரபலம் அடைந்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு நடிகர் சிம்புவின் ஃபேன்ஸ்களும் சப்போர்ட் செய்து வருகின்றனர். அதனாலேயே இவர் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார். அதற்கெல்லாம் ஒரு பெரிய திறமை வேண்டும்.

சாதாரணமாக கூல் சுரேஷ் ஆக இருந்தவர் இப்படி எல்லோருக்கும் தெரியும் அளவிற்கு பிரபலமாக ஆகி இருக்கிறார் என்பது ஒரு நல்ல வளர்ச்சி தான். ஆனாலும் சமீபத்தில் ஆடியோ லான்ச்சில் தொகுப்பாளர் கழுத்தில் திடீரென மாலையை போட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். அது எதற்கு பண்ணினார் என்றே புரியவில்லை. வேண்டும் என்று பண்ணினாரா? இல்லை இவருடைய ஆர்வக்கோளாறில் பண்ணுனாரா என்று யாருக்கும் தெரியாது. இதை வைத்து தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருக்கிறார்.
ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஏழரையை கொண்டு வருவாங்க அந்த மாதிரி தான் இந்த ஏழாவது சீசனில் கூல் சுரேஷ் ஏழரையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் பண்றது எல்லாமே இன்னசென்டாக பண்ணல. தனக்குன்னு ஒரு ஸ்டேட்டர்ஜி வச்சு தான் அவர் பண்ணுகிறார். இவரை பார்க்கும்போது ஜிபி முத்து ஞாபகம் வருது. ஆனால் ஜி பி முத்துவை ஏழரை என்று சொல்ல முடியாது. அவர் ஒரு நல்ல மனுஷன் என்று அந்த பேட்டியில் நடிகை வனிதா பேசியிருக்கிறார்.
இதற்கு அதிகமான ரசிகர்கள் இந்த முறை உங்கள் மகள் கலந்து கொண்டிருப்பதால் அவருக்கு டஃப் ஆக இருக்கும் போட்டியாளர்களை நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்புகின்றனர். அது போல இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் நீங்களும் இதே போல சர்ச்சைக்குரிய போட்டியாளராக தானே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் களம் இறங்கினீங்க? அதெல்லாம் மறந்து போச்சா? என்று கலாய்த்தும் வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications