பிக் பாஸ் 7: இந்த வார எலிமினேட் ஆனது ஜோவிகா இல்ல.. பிக்பாஸ் ரகசியத்தை லைவில் உடைத்த வனிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இன்று ஜோவிகா எலிமினேட் ஆகி இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இதை வனிதா மறுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் தன்னுடைய மகள் நிலை குறித்து வனிதா தன்னுடைய பிக் பாஸ் ரிவ்யூ லைவில் பேசி இருக்கிறார்.
இதனால் இந்த வாரம் எலிமினேட் ஆனது யாரு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. அதே நேரத்தில் ஜோவிகா சீக்ரெட் ரூமில் இருக்க வைக்கப்படுகிறாரா என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போன்றுதான் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தற்போதைய ஏழாவது சீசன் சொல்லவே வேண்டாம். போட்டியாளர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருகிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது.
பிரதீப் தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் நம்பி இருந்த நிலையில் கடைசியில் அவருடைய வெளியேற்றம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதுபோல ஏற்கனவே வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்திருக்கிறார்கள். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இப்படியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் யார் வெளியே போக போகிறார்கள் என்ற கேள்வி சில நாட்களாகவே இணையத்தில் வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு வாக்குகளின் அடிப்படையில் ஜோவிகா கடைசி இடத்தில் இருந்தாலும் விக்ரம் தான் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால் நேற்று பல சேனல்களிலும் நம்ப தகுந்த இடங்களில் இருந்தும் கூட ஜோவிகா தான் வெளியே சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.ஆனால் இது குறித்து ஜோவிகாவின் அம்மாவான நடிகை வனிதா தன்னுடைய பிக் பாஸ் ரிவியூவில் இதை மறுத்திருக்கிறார். ஜோவிகா இந்த வாரம் வெளியே வரவில்லை.
அவள் வெளியே வந்திருந்தால் எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பார்கள். நான் இப்போது கோவாவில் இருக்கிறேன். எனக்கு இதுவரைக்கும் எந்த போன் காலும் வரவில்லை. ஒருவேளை ஜோவிகா வெளியேற்றப்படுவதாக இருந்தால் இன்று நான் ஜோவிகாவை கூப்பிடுவதற்காக அங்கே தான் போய் இருப்பேன் தவிர லைவில் வந்து உட்கார்ந்து இருக்க மாட்டேன்.
இதை உங்களிடம் மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் என்னுடைய வாழ்க்கையே திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது. அதில் இந்த விஷயத்தை நான் மறைத்து வைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஜோவிகா வெளியே வந்திருந்தால் ஆமாம் என்று அதை நான் சொல்லியிருப்பேனே என்று சொல்லி இருந்தார்.
இதனால் அப்போ ஜோவிகா எங்கே தான் போனார் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரத்தில் ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ரகசிய அறையில் இருக்க வைக்கப்பட்டிருக்கிறாரா? என்று கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடந்தது என்பதை இன்று இரவு பார்ப்போம்.












Click it and Unblock the Notifications