இந்த முறை வைல்ட் கார்ட் 5 பேரு.. அதிகாரப்பூர்வமாக கமல் கொடுத்த தகவல்.. இனி நடப்பது இதுதானாம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றோடு 22 வது நாளில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.
அதில் இன்று வெளியான ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன் இந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரி ஐந்து பேர் என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.

அதோடு இன்று வெளியான ப்ரோமோவில் வரும் ஞாயிறு அதாவது அக்டோபர் 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று கமல்ஹாசன் அந்த ப்ரோமோவில் கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த கான்செப்ட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் கடைசியில் இரண்டு வீடு என்று சொல்லி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜெயிலைதான் சின்ன வீடாகவே மாற்றி இருந்தனர்.
இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் இதுவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது என்று கூறுபவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் முதல் நாளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் எலிமினேஷன் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பவா செல்லதுரை தனது உடல்நிலை சரியில்லை என்று சொல்லி தானாகவே விருப்பப்பட்டு வெளியேறி இருக்கிறார்.
இப்படியாக மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ஒருவர் அல்லது இருவர் வைல்ட் கார்ட் என்று ஆக உள்ளே வந்திருக்கின்றனர். ஆனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கான வெளியான ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்று கூறி இருக்கிறார்.
அதாவது இன்று வெளியான ப்ரோமோவில் எல்லோரும் கேம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து வீட்டில் ஹவுஸ் மேட் எல்லாரும் நல்லா செட்டில் ஆகி ஒரு பாட்டனில் விளையாடிகிட்டு இருக்காங்க. முந்தியெல்லாம் இப்படி பாட்டன் பாம் ஆகும் போது ஒரு வைல்ட் கார்டு உள்ளே போவாங்க. அதற்குப் பிறகு நிகழ்ச்சி மாறுதல் ஏற்படும். இப்போ வீடு ரெண்டு இருக்கு அப்பா வைல்ட் கார்டு எத்தனையா இருக்கும் என்று சொல்லி அஞ்சு பேரு,
இவங்க ஆட்டத்தையும் புரிஞ்சுகிட்டு உங்க கருத்துக்களையும் தெரிஞ்சிக்கிட்டு, உள்ளே போறாங்க ஆட்டம் இனி எப்படி மாறப்போகுது என்று அக்டோபர் 29 அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அந்தப் ப்ரோமோவில் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீசனில் விஜய் டிவி தொகுப்பாளராகவும் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்த விஜே அர்ச்சனா ஒரு வைல்ட் கார்டு என்றும், அதுபோல கானா பாடகர் பாலா இன்னொரு வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மொத்தம் இரண்டு பேர் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் என்று கூறப்பட்டு இருப்பதால் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போன்று இன்று வெளியான ப்ரோமோ பலருக்கும் இருந்திருக்கும். ஆனாலும் இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications