பிக் பாஸ் 7: மீண்டும் ஒரு முன்னாள் போட்டியாளரின் மகள்..? wild card பிரபலத்தால் மாறும் ஆட்டம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 29ஆம் தேதி 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமாக இருக்கிறார்கள் என்று ப்ரோமோவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதாவின் மகள் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளராக இருந்த ஒரு பிரபலத்தின் மகள் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக களம் இறங்க இருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
வழக்கம் போல பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்போடு ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் தற்போது மூன்று வாரங்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது.
காரணம் புதியதாக எந்த சீசனிலும் இல்லாத இரண்டு வீடு கான்செப்ட் என்று கூறி இருந்தது தான். இந்த நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் கடைசியாக 18 போட்டியாளர்கள் மட்டும் தான் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் மூன்று போட்டியாளர்கள் இப்போது வெளியே போய் இருக்கும் நிலையில் இன்னும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன் கூறி இருந்தார்.
அதில் விஜே அர்ச்சனா, மானசி, சாம் சாமுவேல், kpy பாலா, கானா பாலா, நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி என ஆறு பேருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களில் ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கருத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவின் மகளும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நமீதா மாரிமுத்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது என்று யாருக்கும் வெளியே சொல்லாமல் அவருடைய உடல்நிலை சரியில்லை அதனால் தான் அவர் திடீரென்று வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் மட்டும் அப்போது கூறியிருந்தனர்.
அது போல நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் நமீதா மாரிமுத்து அதைப் பற்றி முழுமையாக என்னால் சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார். நமீதா மாரிமுத்து அதிக நாட்கள் நிகழ்ச்சியில் இருக்கவில்லை என்றாலும் கொஞ்ச நாள்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
மக்கள் மனதில் திருநங்கைகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை உடைக்கும் வகையாக தான் அவருடைய நடவடிக்கைகள் இருந்தது. திருநங்கைகளின் வலி, வேதனை, அவர்கள் ஆசை, கனவு என எல்லாத்தையும் அவருடைய கதை சொல்லும் டாஸ்க் மூலமாக சொல்லி பலரையும் கண்கலங்க வைத்திருந்தார். அதை தொடர்ந்து தான் கடந்த சீசனில் கூட ஷிவின் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த சீசனில் திருநங்கை போட்டியாளர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது நமீதா மாரி முத்துவின் வளர்ப்பு மகளான பிரவீனா மாயா தான் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று இன்னும் சரியாக தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு சில நாட்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications