பிக் பாஸ் 7: கேமரா முன்பு யுகேந்திரன் திடீரென்று கண்ணீரோடு சொன்ன வார்த்தை.. வெளியே மனைவி பதிலடி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகி இருக்கின்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக நடிகரும் பாடகருமாக இருக்கும் யுகேந்திரன் இருக்கிறார்.
அவர் இன்று காலை தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கேமரா முன்பு ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

யுகேந்திரனின் மனைவியான மாலினி யுகேந்திரன் பற்றி விளக்கம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
அந்த வகையில் விஜய் டிவியில் விறுவிறுப்பாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகள் இருந்தாலும் இந்த வாரத்தில் அடிதடி வரைக்கும் போயிருக்கிறது. டாஸ்க் என்கிற பெயரில் பிக் பாஸ் வீட்டிற்குள் கொளுத்தி போட்டுக் கொண்டிருக்கின்றார். அதனால் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்கள் கைகலப்பு வரைக்கும் ஆகின்றது.
ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு கஷ்டமான டாஸ்க் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் ஆக்சிசன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் நிக்சன் உடைத்த கண்ணாடி கதவுகளால் பிரதீப்பின் உடம்பெல்லாம் கண்ணாடி குத்தப்பட்டதும் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த போது பிரதீப்பை விஜய் சர்மா தூக்கி பந்தாடி இருந்தார். அதுபோல விஷ்ணுவோடும் விஜய் சர்மாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு எந்த வாரம் ரெட் கார்ட் கொடுக்கப்படுமா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை யுகேந்திரன் கேமரா முன்பு தன்னுடைய குடும்பத்தினருக்கு செய்தி ஒன்றை கூறி இருக்கிறார். அதில் தன்னுடைய குடும்பத்தினருக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு 20 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் நான் இங்கு விளையாடுவது வெளியே எப்படி தெரிகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரையில் நான் நியாயமாகத்தான் செய்கிறேன்.
ஆனால் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று எனக்குத் தெரியவில்லை. தேவையான இடத்தில் நான் வாய்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது அது எவ்வாறாக இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைத்து நான் செய்வது உங்களுக்கு பிடித்திருக்கா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.

சண்டை போட்டு தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனாலும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதால் அப்படி செய்கிறேன். அதுதான் சரி என்று நம்புகிறேன். நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று யுகேந்திரன் அப்போது பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் யுகேந்திரனின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேண்டில் செய்யும் அவருடைய மனைவி யுகேந்திரன் புகைப்படங்களை வெளியிட்டு, "உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்.. புரிகின்ற வரை இந்த விளையாட்டு ஒரு புதிர் தான்.." என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமானோர் தங்களுடைய ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications