பிக் பாஸில் நேற்று கெத்தா வெளியே வந்த அருண்.. இவருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் 14வது வாரத்தில் வெளியேற்றப்பட்ட அருணுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. 95 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று 8 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு வந்திருந்தனர். ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அருண் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தார்.

ஆரம்பத்தில் சில வாரங்கள் அமைதியாக இருந்தார். பிறகு சண்டை கோழியாக எல்லா போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். அதிலும் முத்துக்குமரனுக்கும் இவருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை போலத்தான் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
முதல் சில வாரங்கள் முத்துக்குமரன் சொல்வதற்கெல்லாம் அப்படியே தலையாட்டி விட்டு அதை பாலோ செய்த அருணுக்கு விஜய் சேதுபதி கொடுத்த வார்னிங் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால் முத்துக்குமரனையே எதிர்த்து நின்றார். பிறகு தொழிலாளர்கள் மேனேஜர் டாஸ்கில் தீபக்கிற்கும் இவருக்கும் ஏற்பட்ட சண்டையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்குப் பிறகு ஃப்ரீஸ் டாஸ்கில் குடும்பத்தினர் வருகையின் போது முந்தைய பிக்பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா தான் என்னுடைய ஹார்லி குயின் என்று உலகத்திற்கே அருண் அறிவித்திருக்கிறார். அதுபோல முத்துக்குமரனும் இவரும் சொந்தக்காரர்கள் என்பது அவருடைய குடும்பத்தினர்கள் சொன்னதும் அதற்குப் பிறகு முத்துக்குமரனுடன் சண்டை போடவே இல்லை.

இப்படியான நிலையில் நேற்று இவர் வெளியேற்றப்பட்டார். இவருடைய சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே பாரதிகண்ணம்மா என்ற ஹிட் சீரியலில் நடித்து இவர் பிரபலமானதால் அருணுக்கு பிக் பாஸ் சம்பளம் அதிகமாக கொடுத்திருக்கிறது.
அதாவது ஒரு நாளைக்கு 20,000 சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதுபோல இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த 98 நாட்களுக்கும் அவருக்கு மொத்தமாக 19 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது போல எட்டாவது சீசனில் இதுவரைக்கும் வெளியே அனுப்பப்பட்டவர்களில் அதிக சம்பளம் வாங்கியது இவராகத்தான் இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications