பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியின் இணை இயக்குனர் தற்கொலை! கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதரன் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவருடைய இறப்பிற்கு முன்பு அவர் எழுதிய டைரி ஒன்று போலீஸ் கையில் கிடைத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணை இயக்குனராக ஸ்ரீதரன் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி முதல் தெருவை சார்ந்த லெனில், லதா தம்பதியினருக்கு வானரசன் மற்றும் ஸ்ரீதரன் என்ற இரண்டு மகன்கள் உண்டு. இவர்களில் ஸ்ரீதரன் என்பவர் விசாரம் கல்லூரியில் விஸ்காம் பட்டப்படிப்பு முடித்து விஜய் டிவியில் பிக் பாஸ் அசோசியேட் டைரக்டராக பணியாற்றி இருந்தார்.

இந்த நிலையில் டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் கதவை உள் பக்கமாக பூட்டி கொண்டார். அந்த நேரத்தில் அவருடைய பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் அவர்கள் திரும்ப வீட்டிற்கு வரும்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. வெகு நேரமாக அவர்கள் கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே திறந்து பார்த்தபோது ஸ்ரீதரன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இது பற்றி தகவல் தெரிவித்து இருக்கின்றனர். விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார் ஸ்ரீதரின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பிறகு வீட்டில் இருந்த ஸ்ரீதரன் கைப்பட எழுதிய டைரியை கைப்பற்றி இருக்கின்றனர்.

அதில் ஸ்ரீதரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசோசியேஷன் டைரக்டராக வேலை பார்த்து வந்த நிலையில் இந்த துறையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் தன்னுடைய இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் கடிதத்தில் எழுதி இருந்தார்.

அதுபோல ஸ்ரீதரனுக்கு திருமண வரன் அமையாமல் இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிடித்தமான துறையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததும், தான் பிறருக்கு பாரமாக இருப்பதாகவும் அவர் நினைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவு எடுத்ததாக கடிதத்தில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீதரன் மரணத்திற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது. தன்னுடைய விடா முயற்சியும் உழைப்பும் இருந்தால் ஒரு இடத்தில் இல்லை என்றாலும் இன்னொரு இடத்தில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அதற்காக அழகான வாழ்க்கையை முடித்துக் கொள்வது தீர்வு இல்லை. ஒருவர் தற்கொலை செய்வதால் அவருடைய குடும்பத்தினர் படும் வேதனைகள் சொல்ல முடியாது அதனால் தற்கொலை எண்ணம் வந்தால் நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் மனம் விட்டு பேசுங்கள் நண்பர்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+