பிக் பாஸுக்கு போகும் முதல் நாளே நடந்த சோகம்.. வெளியே வந்து இப்படி ஆகும்னு நினைக்கல! ரவீந்தர் வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ரவீந்தர் முதல் ஆளாக எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார். வெளிவந்த பிறகு முதல் முறையாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போது தன்னுடைய அப்பா ஐசியுவில் அட்மிட் ஆகி இருந்தார் என்று இப்போது அவருடைய நிலைமை என்ன என்பது பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முதல் போட்டியாளராக கலந்து கொண்ட ரவீந்தர் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். முதல் எலிமினேஷன் இவர்தான் என்று சொல்லவேண்டும். நிகழ்ச்சியில் 24 மணி நேரத்துக்குள் சாச்சிகா வெளியேற்றப்பட்டாரே என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் அது மக்களை ஏமாற்றுவதற்காக நடந்த லுல்லுலாயி வெளியேற்றம் என்று தான் சொல்ல வேண்டும்.

ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தார். எல்லா சீசன்களையும் அவர் ரிவ்யூ செய்ததால் இந்த நிகழ்ச்சியை பற்றிய நன்கு புரிதலோடு அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனாலயே கண்டன்டுக்கு பஞ்சம் இல்லாமல் அவரால் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்து கொண்டு வந்தார். ஆனால் அவரால் பிசிகல் டாஸ்க் சரியாக விளையாட முடியவில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்தது.
நடக்கும்போதே மூச்சு வாங்கும் ரவீந்தர் பிசிகல் டாஸ்க் எப்படி செய்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனாலும் முதல் முறையாக அந்த வீட்டிற்குள் நடந்த டாஸ்க்கில் ஓடி கால் வலியும் வந்திருந்தது. அப்போது கூட அவர் நான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு இப்போதான் ஓடி இருக்கிறேன். எனக்கு ஓடுவதற்கு தெரியும் என்பதே இப்போதுதான் தெரிகிறது என்று கூட அவர் விளையாட்டாக சொல்லி இருந்தார்.

நிகழ்ச்சியில் சுவாரசியமான நபராக இருந்தாலும் இவருக்காக தான் பிக் பாஸ் வீட்டிற்குள் ரிஸ்க் இல்லாத டாஸ்க் வைக்கப் போகிறார்கள் என்று பலர் கருத்து கூறி வந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டு விட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே போகும் போது தன்னுடைய வழக்கமான ரிவ்யூவை
விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க போட்டியாளர்களின் முகத்துக்கு நேராக கொஞ்சம் கடுமையாகவே சொல்லி இருந்தார்.
சில போட்டியாளர்களை பற்றி அதிகமாக நெகட்டிவாக பேசி இருந்தார். இன்னும் ஒரு சில போட்டியாளர்களைப் பற்றி அவர்களே நாணும் அளவிற்கு அதிகப்படியாகவும் பேசி இருந்தார். "ஆடிய கால்கள் சும்மா இருக்காது" என்று பழமொழி சொல்வது போல நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து ரிவியூவர் ரவீந்தர் நாளையிலிருந்து நான் வழக்கம் போல ரிவ்யூ தொடங்கி விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு முன்னோட்டமாக நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசியிருந்தார். அப்போது நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாள் தான் என்னுடைய அப்பாவுக்கு ஆபரேஷன் நடைபெற்றது. என்னுடைய அப்பாவை ஐ சியூவில் சென்று நான் பார்க்காமல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனேன். அவருக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவது ரொம்பவே சந்தோஷம். ஆனால் அவர் ஹாஸ்பிடலில் இருந்து வீடு வந்து சேர்வதற்குள் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பேக் பண்ணி அனுப்பி விட்டார்கள். இதை நான் எதிர்பார்க்கல
பிக் பாஸ் 8: விளையாட வந்தாங்களான்னு சந்தேகமா இருக்கு? ஒரே சண்டை.. முடிச்சு விட்டுருவோம்.. VJS பஞ்ச்
ஆனாலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. எனக்காக சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தாங்க அவர்களுக்கு என்னுடைய அன்பை நான் செலுத்த விரும்புகிறேன். அதுபோல சில ரிவியூவர்ஸ் நான் மாட்டிக் கொண்டேன் என்று என்னை வச்சு செஞ்சிருக்காங்க. என்னை பற்றியும் நிகழ்ச்சி பற்றியும் பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் இருக்கிறது. அதற்கு நான் நாளையில் இருந்து ரிவ்யூ கொடுக்கிறேன் என்று அந்த வீடியோவில் ரவீந்தர் பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications