பிக் பாஸ் 8: கோடால் சண்டையை தொடங்கி வைத்த பிக் பாஸ்.. ரவீந்தர் பிளான்.. முதல் நாளே வெடித்த பிரச்சனை!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்று இரண்டு பிரிவாக போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாட இருக்கிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். அதில் ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் உள்ளே பிக் பாஸ் புது டாஸ்க் கொடுத்து அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளர்கள் வந்த உடனே வீட்டின் கதவை திறக்காமல் அவர்களை கார்டன் ஏரியாவில் பிக் பாஸ் காத்திருக்க வைத்திருந்தார். ஆறு போட்டியாளர்கள் வந்த பிறகு அவர்களை வீட்டிற்குள் அனுமதித்து இருந்தார். வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களிடம் உள்ளே ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது நீங்கள் வீட்டை முழுமையாக சுற்றிப் பார்த்துவிட்டு கோட்டிற்கு அந்தப் பக்கம் போகிறோம் என்று நினைக்கிறீர்களா? இந்த பக்கம் போகப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா என்பதை பாய்ஸ் தனியாகவும் கேர்ள்ஸ் தனியாகவும் சொல்லுங்கள் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.
அதன்படி வீட்டின் எல்லா பக்கங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு பெண்கள் எங்களுக்கு பிங்க் கலர் வேண்டும் என்று சொல்கின்றனர். ஆண்கள் எங்களுக்கு பிங்க் கலர் வேண்டும் என்று சொல்கின்றனர். காரணம் அங்கு போடப்பட்டிருக்கும் கோட்டின் ஒரு பக்கத்தில் குறைவான பெட் உள்ள பெட்ரூம் இருக்கிறது. அந்தப் பக்கத்தில் கிச்சன் இருக்கிறது, பாத்ரூமும் இரண்டு தான் இருக்கிறது.
மறுபக்கத்தில் அதிகமான பாத்ரூம் இருக்கிறது அதுபோல அந்த பக்கத்தில் இருக்கும் அறைகளில் பல வசதிகளும் இருக்கிறது. அதனால் ஆண்கள் வெர்சஸ் பெண்கள் இருவரும் பிங்க் கலர் வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கின்றனர். பிறகு இவர்கள் இருவரும் எந்த முடிவும் சரியாக எடுக்க முடியவில்லை என்பதால் பிக் பாஸ் நீங்கள் சரியான முடிவு எடுக்க முடியவில்லை என்பதால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.
நீங்கள் இந்த வீட்டிற்குள் வந்ததும் வெளியே லிவிங் ஏரியாவில் எந்த இடத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களோ அதே இடத்தில் நான் சொல்கிற வரைக்கும் உட்கார்ந்திருக்க வேண்டும். யாரும் யாரிடமும் பேசவே கூடாது என்று அவர்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்திருக்கிறார். முதல் நாளே இங்கே பிரச்சனை தொடங்கிவிட்டது.
ரவீந்தர் ஆண்கள் அணியில் இருக்கும் நிலையில் தன்னால் குறைவான இடத்திற்கு இருக்க முடியாது என்பதற்காகவே ஆண்கள் அணியில் தங்களுக்கு பிறகு வருபவர்களும் கஷ்டப்படக் கூடாது என்று பெண்களிடம் வாதித்து கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் போது ரவீந்தர் அதிக நாட்கள் இந்த வீட்டிற்குள் தாக்கு பிடிப்பாரா? என்று யோசிக்க வைக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications