முடியாத பிக் பாஸ் 8 பிரபலங்களின் சண்டை.. முத்துக்குமரன் கருத்துக்கு சௌந்தர்யா கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனை இன்னும் முடிவடையவில்லை. முத்துக்குமாரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வார்த்தையை வைத்து சௌந்தர்யா சோஷியல் மீடியாவில் வருத்தமான பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியையும், சர்ச்சையையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொரு சீசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பரபரப்பு தொடங்கிவிடும். இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அலச தொடங்கி விடுவார்கள். அது போல இந்த நடிகை வராங்க அந்த நடிகை வராங்க என்று வதந்திகளும் பரவிவிடும்.

ஆனாலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு இந்நிகழ்ச்சியில் நடந்த சில செயல்கள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சண்டை சச்சரவுகளோடு தான் இருந்தது. ஆனாலும் முடியும் நேரத்தில் அதிகமான பாசிட்டிவ் இருந்தது. இந்த சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் ஏற்கனவே ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்கள் தான்.
அதுபோல டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டது பலருடைய பாராட்டையும் பெற்று வந்தது. ரசிகர்கள் சப்போர்ட் சௌந்தர்யாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்தது. ஆனால் சௌந்தர்யாவுக்கு சப்போர்ட் செய்வது ரசிகர்கள் அல்ல பி ஆர் என்று போட்டியாளர்கள் விமர்சித்து வந்தார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நிகழ்ச்சியின் முடிவில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டபோது சௌந்தர்யா தான் அதிகமாக சந்தோஷப்பட்டார். நீங்கள் டைட்டில் வின்னர் என்று என்னை அறிவித்திருந்து என் கையில் கோப்பையை தந்திருந்தால் கூட நான் இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன். என்னுடைய அப்பா அந்த கோப்பையை பிடுங்கி முத்துக்குமரனிடம் கொடுத்து இருப்பார் என்று விஜய் சேதுபதியிடம் பைனல் மேடையில் சௌந்தர்யா சொல்லி இருந்தார்.

அதனால் முத்துக்குமரன் ரசிகர்களும் சௌந்தர்யாவை பாராட்டி இருந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு பிறகு முத்துக்குமரன் பேசிய விஷயம் தான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதாவது ஒரு பேட்டியில் முத்துக்குமரன் பேசும் போது சௌந்தர்யா பற்றிய உங்களுடைய நிலைப்பாடு வீட்டில் இருந்தபோது ஒன்றாகவும், வெளியே வந்த போது ஒன்றாவதாகவும் உள்ளதே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அதற்கு அவர், ஆமாம் என்னுடைய கருத்துப்படி பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாத ஆள்தான் சௌந்தர்யா. ஆனால் என்னுடைய கருத்து வெகுஜன மக்களின் கருத்தோடு வேறுபட்டு இருந்தது. அவர் அந்த விளையாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் தான் நான் அவரை ஒவ்வொரு முறையும் நாமினேட் செய்தேன் என்று பேசியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சௌந்தர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது ஆனாலும் இன்னும் சிலர் என்னை நாமினேட் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications