விஜய் சேதுபதி முன்பு சுனிதாவை அவமானப்படுத்திய தர்ஷா.. கடைசியில் கிடைத்த பெரிய அதிர்ச்சி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று தர்ஷா குப்தா எலிமினேஷன் ஆகி இருக்கிறார். அப்போது விஜய் சேதுபதி முன்பு சக போட்டியாளர்கள் குறித்து பேசும்போது சுனிதா பற்றி தர்ஷா சில விஷயங்களை பேச அதற்கு விஜய் சேதுபதி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று சில சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றது. ஏற்கனவே தர்ஷா குத்தா தான் எலிமினேஷன் ஆகியிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்து விட்ட நிலையில் அவர் வெளியே செல்லும்போது என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருந்தது.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கும் அது குறித்த பயம் இருந்தது. தர்ஷா எலிமினேஷன் என்று சொன்னதுமே தீபக் உட்பட சில போட்டியாளர்கள் இன்னைக்கு என்ன பஞ்சாயத்து நடக்கும்னு தெரியலையே! ஏற்கனவே ரெண்டு வாரம் பட்டபடு போதும் இப்போ என்ன நடக்க போகுதுன்னு தெரியாம நெஞ்சு பக்கு பக்குன்னு இருக்கு என்று பயத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னது போலவே தர்ஷா குப்தா விஜய் சேதுபதி முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கும் போது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பற்றி தனத்திற்கும் கோபத்தை தேள் போல கொட்டியிருந்தார். அதிலும் சுனிதாவிடம் அவர் பேசியது தான் வேற லெவலில் இருந்து.
தர்ஷா பேசுவதற்கு முன்பே சுனிதா நான் உன்னை இந்த டிவியில் பார்ப்பதற்கு நீ ரொம்ப அழகா இருக்க. நீ ஆசைப்பட்ட மாதிரியே இப்போ டிவியில் அழகா தெரியிற என்று சொல்ல, உடனே சிரித்தபடியே தர்ஷா நறுக்குன்னு கொட்டு கொடுத்து இருந்தார். அதாவது நான் இப்படி ஆசைப்படவே இல்ல. நான் இதைத்தான் நினைக்கிறேன் என்று வீட்டுக்குள் இருக்கும்போது தான் நீங்களாக ஒண்ணு நினைச்சுட்டு சொல்லிட்டு இருந்தீங்க.
இப்போ உங்களை விட்டு வெளியே வந்த பிறகு அதையே சொல்லுறீங்களே? நான் உள்ளிருக்கும் போது நீ இதைத்தான் நினைக்கிறேன், இதைத்தான் செய்யப் போற என்று என் மீது ஒரு முத்திரை குத்தினீங்க ஆனால் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருந்தது. அது உள்ளிருக்கும் யாருக்கும் தெரியாது.
நீங்க ஆறு பேர் கொண்ட குழுவாக இருந்தீங்க. உங்க குழுவில் நீங்க எடுப்பதுதான் உறுதியான முடிவாகவும் இருந்தது. அதையேன் நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று தான் நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்து கொண்டிருந்தீர்கள். உங்கள் ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே வந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.
அடுத்தடுத்து அவங்க வருவாங்க என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி குறிக்கிட்டு யார் இரண்டு பேர் வருவாங்க? வரணும் என்று நினைக்கிறீங்க? என்று கேட்க , அதற்கு தர்ஷா ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா தான் வெளியே வரணும். இவங்கதான் ஆறு பேர் குழுவில் தலைவராக இருக்கிறாங்க.
இவங்க ரெண்டு பேரும் கலண்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, சுனிதா நான் என்ன பேசினாலும் இப்படி பேசினா எப்படி என்று அமைதியாகிவிட்டார். ஆனால் கடைசியில் விஜய் சேதுபதி தர்ஷாவிடம் நீங்கள் உள்ளிருக்கும் போது இதையெல்லாம் பேசி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மூன்று வாரங்கள் உங்களோடு இருந்த போட்டியாளர்கள் பற்றி வெளியே வந்ததும் அவர்கள் மீது இருக்கும் கோபத்தை எல்லாம் கொட்டுகிறீர்களே?
அப்போ அவர்களுக்கு உங்கள் மீது கோபம் ஏற்படும். இது நாள்கணக்கில் உங்கள் மனதில் இருந்து கொண்டிருக்கும். அவர்கள் மனதிலும் உங்கள் பற்றி கோபம் உருவாகும். அதனால் அந்த இடத்தை விட்டு நாம வந்தாச்சு என்றால் அவர்களுடைய பாசிட்டிவ் மட்டும் பேசலாம் உங்களால்தான் நடந்தது என்று குறையை மட்டும் நம்முடைய மனதில் சுமந்து கொண்டிருக்க வேண்டாம்.
இதற்கு முந்தைய வாரம் அருனாவிடமும் நான் இதைத்தான் சொன்னேன். அதுபோல உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொள்கிறேன். யாரும் வெளியே வந்து அடுத்தவர்களுடைய குறையை பற்றி பேசாதீர்கள் அவர்களுடைய நிறையை பேசுங்கள் என்று சொல்ல, தர்ஷா சரி என்று சொல்லிவிட்டு அமைதியாக தலையாட்டிக் கொண்டிருந்தார்.
கடைசியில் விஜய் சேதுபதி ஓகே தர்ஷா போயிட்டு வாங்க என்று சொன்னதும் சரி சார் போயிட்டு வரேன் என்று கூட சொல்லாமல் டக்கு என்று கிளம்பிய தர்ஷா அங்கிருக்கும் மக்களிடம் மட்டும் கைகளை ஆட்டியபடி டாட்டா காட்டிவிட்டு சென்ற வேகம் விஜய் சேதுபதி மீது இருக்கும் கோபத்தையும் காட்டியது.












Click it and Unblock the Notifications