ஒரே ஒரு சின்ன தப்பு.. பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாக்குலின்! ஆனால் இவ்வளவு பெரிய தொகை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ஜாக்குலின் 14வது நாளில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் வாங்கிய சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி அதிகமான எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தான் நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றனர். அதுபோல இந்த சீசனில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் தான் விளையாட்டு இருக்கிறது.
இந்த சீசனில் டைட்டில் வின்னராக தீபக் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் அவர் எதிர்பார்க்காத விதமாகவே வெளியேற்றப்பட்டார். அதுபோல இப்ப வரைக்கும் வெளியான தகவலின் படி ஜாக்குலின் அல்லது முத்துக்குமரன் ஜெயிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று ஜாக்குலினும் மிட் நைட்டில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

எல்லா சீசனிலும் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே பணப்பெட்டி டாஸ்க் தொடங்கிவிடும். ஆனால் இந்த சீசனில் கடைசி வாரத்தில் தான் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு அறையில் பணப்பெட்டியை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர் மட்டும் தான் வெற்றியாளர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வர தவறிவிட்டால் அவர் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 50,000 வைக்கப்பட்டிருந்த போது முத்துக்குமரன் தைரியமாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து ரயான் 2 லட்சம் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக பவித்ராவும் 2 லட்சம் வெற்றி பெற்று இருக்கிறார். அவரை தொடர்ந்து ஜாக்குலின் பணப்பெட்டியை எடுக்கும் போது அவரால் சரியான நேரத்திற்குள் வர முடியாததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி இருக்கிறார். இந்த நிலையில் அவர் வாங்கிய சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 104 நாட்கள் ஜாக்குலின் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஜாக்குலினுக்கு 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
கடைசியாக பைனலுக்கு ஆறு பேர் இருந்த நிலையில் இப்போது ஜாக்குலின் வெளியேற்றப்பட்டு இருப்பதால் 5 போட்டியாளர்கள் மட்டும் செல்கிறார்கள். இவர்களில் ரயான் டிக்கட் டு பினாலே ஜெயித்து நேரடியாக பினாலேவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த வார வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா மற்றும் விஷால் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். அவர்களில் இருவரில் ஒருவர்தான் வரும் சனிக்கிழமை எபிசோட்டில் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications