நடிகர் பிரித்விராஜ் படத்தில் என்னை ஏமாற்றிவிட்டாங்க.. இது துரோகம்.. பிக் பாஸ் தமிழ் 8 பிரபலம் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வர்ஷினி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் பிரித்விராஜ் படத்தில் தான் நடித்த போது தான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று வருத்தத்தோடு பகிர்ந்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பலமொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் தமிழ் நிகழ்ச்சியில் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. சமீபத்தில் எட்டாவது சீசன் வித்தியாசமாக இருந்தது. இந்த சீசனில் மட்டும்தான் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ரசிகர்களுக்கு பரீட்சயமான முகமாக இந்த சீசனில் களம் இறக்கி டிஆர்பிஐ அதிகரிக்க வைத்து விட வேண்டும் என்று விஜய் டிவி புதுமையாக யோசித்து இருந்தது.

Vijay TV Bigg Boss

விலகிய கமல்ஹாசன்

இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் இந்த சீசனில் இருந்து விலகி ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் இடத்தில் இனி யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருந்தது.

விமர்சனங்கள்

அப்போது பலர் விஜய் சேதுபதி வந்தால் நிகழ்ச்சிக்கு நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விஜய் சேதுபதியே வந்துவிட்டார் ஆனால் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் பலரை பேசவிடாமல் தடுக்கிறார், இவரே கேள்வி கேட்டு இவரே பதில் சொல்லிவிடுகிறார் போட்டியாளர்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல விடாமலேயே அவர்களை அசிங்கப்படுத்தி உட்கார வைத்து விடுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது.

வைல்டு கார்ட் என்ட்ரி

ஆனாலும் அதுவெல்லாம் தாண்டி விஜய் சேதுபதியின் பேச்சை பலரும் பாராட்டி வந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி விட்டனர். அதில் ஒருவர் தான் நடிகை வர்ஷினி. வர்ஷினி வைல்ட் கார்டு போட்டியாளராகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எலிமினேஷன்

ஒரு சில வாரங்கள் மட்டும் தான் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார். ஆனாலும் பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைத்தது. அதாவது ஸ்கூல், காலேஜ் டாஸ்க்கில் இவர் கல்லூரி பேராசிரியராக பெர்பார்மன்ஸ் செய்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் இவருடைய கெட்டப், ஸ்டைல் இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது.

படத்தில் ஏமாற்றம்

ஆனாலும் இவர் நிகழ்ச்சிகளில் இருந்து வெளியே வந்த பிறகு கூட தொடர்ந்து சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது மலையாளத்தில் மை ஸ்டோரின்னு ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் என்னுடைய காட்சிகள் மொத்தமாக தூக்கப்பட்டு விட்டது, இது தெரியாமல் என் அப்பாவை தியேட்டருக்கு படத்தை பார்க்க கூட்டிட்டு போயிருந்தேன்.

Vijay TV Bigg Boss

காணாமல் போன காட்சி

ஆனால் படம் கடைசி வரைக்கும் என்னுடைய காட்சிகள் வரவே இல்லை. சரி கிரெடிட்டிலாது பெயர் வருமே அதையாவது காட்டலாம் என்று காத்திருந்தேன். அது கூட நடக்கவில்லை. அதனால் நான் அங்கேயே உட்கார்ந்து அழுதுவிட்டேன் என்று பேசி இருந்தார். 2018 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் மற்றும் பார்வதி நடிப்பில் மை ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அழுத வர்ஷினி

அதேபோல ஒவ்வொரு திரைப்படமும் உருவாக்கும் போது அதில் பல காட்சிகள் கட் செய்து தூக்கி விடுவார்கள். ஆனால் ஒரு நடிகை நடித்த மொத்த காட்சிகளையும் தூக்கி விட்டார்கள் என்று அவர் வருத்தத்தோடு பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜிம் வீடியோஸ்

சும்மாவே இது மலையாள சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அதிகமாக இருக்கும் நிலையில் அதன் காரணமாக கூட வர்ஷினி காட்சிகள் மொத்தமாக தூக்கி விட்டார்களா என்று கேள்விகளும் எழுப்பப்படுகிறது. அதுபோல வர்ஷினி அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்களையும் ஜிம் பக்கம் போகும் ஆர்வத்தை கூட்டிக் கொண்டிருக்கிறார். அதோடு உடல் எடை குறைப்பதற்காக இவர் கொடுக்கும் டிப்ஸ்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+