2 நாளா போஸ்ட் போடாத காரணம் இதுதான்! இதை எதிர்பார்க்கல! சீரியல் பிரபலங்களை டேக் செய்து பவித்ரா போஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த பவித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் தான் எதற்காக இரண்டு நாட்களாக எந்த போஸ்ட்டும் போடவில்லை என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

நிகழ்ச்சி தொடங்கிய பிறகு சில வாரங்கள் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு பிறகு நிகழ்ச்சி பற்றிய விவாதம் ரசிகர்கள் மற்றும் எழுந்தது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்டாக முத்துக்குமரன்,ரியான், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் தேர்வாகி இருந்தனர்.
முத்துக்குமரன் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதுபோல மத்த சீசன்கள் போல இந்த சீசன் இல்லை என்பது பலருடைய கருத்து. இந்த நிலையில் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக இருந்த பவித்ரா ரசிகர்கள் மனதை மிகவும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் விஜய் டிவியில் சில சீரியல்களில் துணை கேரக்டர்களில் நடித்து கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருந்தார்.
அதிலும் அவருக்கு ஈரமான ரோஜாவே சீரியல் பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் பவித்ராவிற்கு தனி அடையாளமாக இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தன்னுடைய வெற்றியை நிலை நிறுத்த வேண்டும், திறமையை காட்ட வேண்டும் என்று பவித்ரா எல்லா இடங்களிலும் முயற்சி எடுத்து விளையாடினார்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பவித்ராவால் ஒருமுறை கூட தலைவர் பதவியில் இருக்க முடியவில்லை. அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்கள் கழித்து இப்போதுதான் முதல்முறையாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் எதற்காக தான் இரண்டு நாட்களாக போஸ்ட் போடவில்லை என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
பவித்ரா மட்டும் இன்னமும் எந்த போஸ்ட்டும் போடவில்லையே ஏன் என்று எல்லோரும் கேட்டு வருகிறார். நான் இரண்டு நாட்களாக என்னுடைய ரசிகர்கள் எனக்காக எடிட் செய்த புகைப்படங்கள் வீடியோக்களை தான் பார்த்துக் கொண்டே இருந்தேன். ரசிகர்கள் எனக்காக இவ்வளவு மெனக்கெட்டு எனக்காக எடிட் பண்ணி இருக்கிறார்கள் அதை தான் எல்லாவற்றையும் பார்த்து பலருக்கு ரிப்ளை கொடுத்து இருந்தேன்.
இன்னும் பலருக்கு என்னால் ரிப்ளை கூட கொடுக்க முடியலை. எங்களை மாதிரி இருக்கவங்களை புரிஞ்சுகிட்டு இவ்வளவு நாளா ஓட்டு போட்டதற்கு ஒரு பெரிய நன்றி. இவ்வளவு தூரம் நான் வருவதற்கு பெரிய காரணம் நீங்க எல்லாரும் தான். இதை நான் எப்படி பார்க்கிறேனா என்ன மாதிரி இருக்கிற மக்கள் எல்லாருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.
ரசிகர்களால் தான் எங்களால இவ்வளவு தூரம் வர முடிஞ்சிருக்கு. எனக்கு சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் பெரிய பெரிய நன்றி. நீங்கள் எனக்கு அடித்து வரும் அபரிமிதமான ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே போதாது. அன்பும் பரவசமும் நிறைந்த பயணம் என் வாழ்க்கையில் எங்கள் செய்த அனைத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்று அந்த பதிவில் பவித்ரா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications