அடுத்த ஜென்மத்தில் சௌந்தர்யாவாக நான் பிறக்கணும்! ராணவ் இப்படித்தான்! பவித்ரா ஓபன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தில் வெற்றி பெற்ற பவித்ரா தான் அடுத்த ஜென்மத்தில் சௌந்தர்யாவாக பிறக்கணும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு ராணவ் மற்றும் ஜாக்குலின், முத்துக்குமார் போன்ற பலரை பற்றியும் பவித்ரா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரைக்கும் நடிகை பவித்ரா ஜனனி தாக்கு பிடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் சிலர் சண்டை போட்டு கண்டன்ட் கொடுத்தால் மட்டும்தான் தாக்கு பிடிக்க முடியும் என்று இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடவடிக்கையாலும், எந்த டாஸ்க்கிலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடி பவித்ரா தனி வரவேற்பு பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பவித்ரா பதில் கொடுத்திருக்கிறார். அதில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த ரெண்டு நாட்களாக வீட்டில் தான் இருந்தேன். போன் எடுத்து பார்க்கும்போது வீடியோ எடிட் எல்லாம் பார்த்து நாம் இவ்வளவு பண்ணியிருக்கோமா என்று தோணுச்சு.
வெளியே எல்லோரும் என்னிடம் பேசும் விதம் எனக்கு இப்போ சந்தோஷமா இருக்கு. சிலர் என்னை ஏஞ்சல்னு சொல்றாங்க. அதைக் கேட்கும் போது ஏதோ நாம பண்ணி இருக்கிறோம் என்று மனம்நிறைவா இருக்கு. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதில் சௌந்தர்யா ஒரு யூனிக்கான கேரக்டர். உள்ளே இருக்கும்போதே நான் இதை பல இடங்களில் சொன்னேன்.
அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் சவுண்டு உன்ன மாதிரிதான் நான் பிறக்கணும்னு சொல்லி இருக்கிறேன். அவ எதை பத்தியும், யாரை பத்தியும் யோசிக்க மாட்டா. அவளுக்கு என்ன தோணுதோ அதை செஞ்சிடுவா. செஞ்சிட்டு ஆமா நான் இதைத்தான் செஞ்சேன் இப்ப என்ன சொல்றீங்க அதுக்கு? இதுதான் நான் என்கிற மனநிலையில் இருப்பா. அதை பார்க்கவே ஜாலியா இருக்கும்.
இவ என்ன இப்படி தொனுவதை எல்லாம் பேசறா? யாரைப் பற்றியும் யோசிக்க மாட்டேன் என்கிறா என்று நமக்கு தோணும். ஆனால் அதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குது என்று நான் சௌந்தர்யாவை நிறைய ரசித்து இருக்கிறேன். அதுபோல ஜாக்குலின் எப்போ எது நடந்தாலும் பாத்துக்கலாம் என்று தைரியமா இருப்பா. அவ ரொம்ப கூலா இருப்பா. தர்ஷா ரொம்ப அப்பாவி. யாராவது கலாய்த்தா கூட அவளுக்கு அது தெரியாது.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நான் ரொம்ப சண்டை போட்டது ராணவ் கூட தான். ஆனால் ராணவ் ரொம்ப ஃபன்னான நபர். ராணவ் இருந்தால் ஜாலியா இருக்கும். சீரியஸா நாம பேசிகிட்டு இருக்கும்போது கூட ராணவ் பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துடும். அவர் ஒரு குட் சோல். ரொம்ப ஜாலியா இருப்பார். நல்ல மனிதர் அவரை சுற்றி நடப்பதை தாண்டி அவர் என்ன பண்றார் என்பதில் கவனமாக இருப்பார் என்று பவித்ரா பேசி இருக்கிறார்.பவித்ரா தன்னோடு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்கள் பற்றி பாராட்டியதற்கு அவருடைய ரசிகர்கள் பவித்ராவை பாராட்டி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications